Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பள்ளி சிறுவன் போல் விராட் கோலி தவறு செய்தார்!நேரலையில் மோதி கொண்ட இர்பான் பதான், சஞ்சய் மஞ்சுரேக்கர்

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 82 ரன்களில் ரன் அவுட் ஆனார். இந்த ரன் அட்டில் யார் மீது தவறு இருக்கிறது என்பது குறித்து விவாதிக்கும் போது நேரலையில் இர்பான் பதானும், சஞ்சய் மஞ்சுரேக்கரும் காரசாரகமாக மோதிக்கொண்டனர்.

ஜெய்ஸ்வால் அடித்த பந்து பேட் கம்மின்ஸ் இடம் பிடிபட்டது. ஆனால் விராட் கோலி, ஜெய்ஸ்வால் ஓடுவதை பார்க்காமல் பேட் கம்மிம்சை திரும்பி பார்த்ததால், அவர் ரன் ஓடாமல் அங்கேயே நின்று விட்டார்.

ind vs aus virat kohli yashasvi jaiswal boxing day test vs

இதனால் ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார். இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்சுரேக்கர், ஜெய்ஸ்வால் அடித்த பந்து மெதுவாக தான் பேட் கம்மின்ஸ் இடம் சென்றது. கம்மின்சை பார்க்காமல் விராட் கோலி இருந்தார். நிச்சயம் இது ரன் ஆகி மாறி இருக்கும். ஜெய்ஸ்வால்தான் ரன் ஓடுகிறார். அப்போது அவர் ரன் அவுட் ஆக தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.

கோலிக்கு ஆபத்து கிடையாது. ஆனால் ஒரு பள்ளி சிறுவன் போல் விராட் கோலி தவறு செய்துவிட்டார். பேட்ஸ்மேனை பார்க்காமல் ஃபில்டரை திரும்பிப் பார்த்து ரன் ஓடாமல் நின்று விட்டார். இது ஜெய்ஸ்வால் மீது தவறு என்றால் அவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகி இருப்பார் என்று சஞ்சய் கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த இர்பான் பதான் பந்து பில்டர் கையில் செல்கிறதா என்பதை விராட் கோலி பார்த்தார். இதில் விராட் கோலி மீது எந்த தவறும் இல்லை. ரன் ஓடுவதில் ரிஸ்க் இருக்கிறது என தெரிந்தால் எதிர் முனையில் இருப்பவர் அந்த ரன்னை ஓடாமல் தவிர்க்க அனைத்து உரிமையும் இருக்கிறது என்று கூறினார்.

இதற்கு சஞ்சய் மஞ்சுரேக்கர் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்தார். இர்பான் விடாமல் பேசினார் .இதனால் கடுப்பான சஞ்சய் மஞ்சுரேக்கர் நீங்கள் என்னை பேச அனுமதிக்கவில்லை என்றால் பரவாயில்லை. நீங்களே பேசுங்கள் என்று கோபமாக கூறினார். தொடர்ந்து பேசிய சஞ்சய் மஞ்சுரேக்கர், இர்பான் பதானில் இந்த கருத்து பயிற்சியாளர்களின் புக்கில் இடம்பெற வேண்டும் என கிண்டலாக பேசினார். மேலும் ஜெயஸ்வாலை ரன் அவுட் ஆகி விட்டோம் என்ற குற்ற உணர்விலே கோலி ஆட்டம் இழந்து விட்டதாகவும் சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்தார்.

Story first published: Friday, December 27, 2024, 18:46 [IST]
Other articles published on Dec 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+