For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதே தப்பு.. இனி டீமிலேயே இடம் இல்லை.. இளம் வீரர் மீது செம கடுப்பாக இருக்கும் கேப்டன்!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றார்.

அவருக்கு குறைந்த அளவே வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் அவர் சொதப்பலாக செயல்பட்டார்.

அவருக்கு இனி வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேப்டன் விராட் கோலி மற்றும் அணி நிர்வாகம் அவர் மீது சில விஷயங்களில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்

இந்திய அணியின் தோனி ஓய்வுக்குப் பின் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரிஷப் பண்ட் தானே தன் வாய்ப்பை வீணாக்கிக் கொண்டார். அடுத்து சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த ஒரீரு வாய்ப்புகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

முந்திய ராகுல்

முந்திய ராகுல்

இந்த நிலையில், பேட்ஸ்மேன் ஆக அணியில் இடம் பெற்று இருந்த கேஎல் ராகுல் அதிரடியாக அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மாறினார். அவரின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதால் அவரை தொடர்ந்து விக்கெட் கீப்பராக பயன்படுத்தி வருகிறார் கேப்டன் கோலி.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

சஞ்சு சாம்சன் நல்ல பார்மில் இருக்கும் நிலையில் அவரை அணியின் மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டார் கேப்டன் கோலி. அவருக்கு ஆஸ்திரேலிய டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அந்த முதல் டி20 போட்டியில் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஓரளவு ரன் எடுத்த அவர் அடுத்த இரு போட்டிகளில் சொற்ப ரன்களே எடுத்தார். அதிரடி ஆட்டம் ஆட முயன்று அவர் தன் விக்கெட்டை பறிகொடுத்து வந்தார்.

அவுட்டான விதம்

அவுட்டான விதம்

மூன்று போட்டிகளிலும் தவறான ஷாட்களை தேர்வு செய்து ஆடியதே அவரது விக்கெட் பறிபோக காரணமாக இருந்தது. நான்காம் வரிசையில் ஆட வைக்கப்பட்ட அவர் மிடில் ஆர்டருக்கு ஏற்ப நிலையாக ஆடாமல் விக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஆடினார்.

கோலி முடிவு என்ன?

கோலி முடிவு என்ன?

கேப்டன் விராட் கோலி சஞ்சு சாம்சனுக்கு இனி வாய்ப்பு கொடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இணைய காத்துக் கொண்டு உள்ளனர். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவது கடினமே.

ரிஷப் பண்ட் காத்திருப்பு

ரிஷப் பண்ட் காத்திருப்பு

சமீபத்தில் அணியில் இடத்தை இழந்த ரிஷப் பண்ட்டுக்கு இதன் மூலம் மீண்டும் இந்திய அணி கதவுகள் திறக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சையது முஷ்டாக் அலி டி20 தொடர் மற்றும் 2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியில் மீண்டும் நுழையக் கூடும்.

Story first published: Thursday, December 10, 2020, 16:55 [IST]
Other articles published on Dec 10, 2020
English summary
IND vs AUS : Sanju Samson may lose his spot in Team India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X