Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகிலேயே எந்த ஸ்பின்னரும் செய்யாததை செய்த வருண் சக்கரவர்த்தி.. முதல் 10 ஓவர்களில் ஹெட் விக்கெட்

துபாய்: உலகின் எந்த ஸ்பின்னராலும் செய்ய முடியாத ஒரு காரியத்தை வருண் சக்கரவர்த்தி செய்து அசத்தியிருக்கிறார். டிராவிஸ் ஹெட் விக்கெட்டை ஒருநாள் போட்டியில் முதல் பத்து ஓவர்களுக்குள் வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்துள்ளார் வருண் சக்கரவர்த்தி. இதற்கு முன் எந்த ஒரு ஸ்பின்னரும் அதை செய்ததில்லை, வருண் தான் இந்த அசாத்திய சாதனையை செய்த முதல் ஸ்பின்னர் என்பது பற்றிய புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் கூப்பர் கானொலி மற்றும் டிராவிஸ் ஹெட் துவக்கம் அளித்தனர். முதல் சில ஓவர்களை இருவரும் நிதானமாக எதிர்கொண்டனர்.

IND vs AUS Varun Chakravarthy Champions Trophy 2025 India 2025

கூப்பர் கானொலி 9 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். டிராவிஸ் ஹெட் அதன் பின் அதிரடிக்கு மாறினார். ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோரின் ஓவர்களில் அதிரடியாக பவுண்டரிகளை அடித்தார். இந்த நிலையில் ஒன்பதாவது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார்.

அந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தை சந்தித்தார் டிராவிஸ் ஹெட். வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் இதுவே அவர் சந்திக்கும் முதல் பந்தாகும். இதற்கு முன் ஐபிஎல் தொடரிலும், சர்வதேச போட்டிகளிலும் டிராவிஸ் ஹெட் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக பேட்டிங் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட டிராவிஸ் ஹெட் இறங்கி வந்து பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்தார். அங்கே சுப்மன் கில் ஃபீல்டிங் நின்று கொண்டிருந்தார். அவர் ஓடிவந்து பந்தை கேட்ச் பிடித்தார். இதை அடுத்து டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதற்கு முன் டிராவிஸ் ஹெட் ஒருநாள் போட்டிகளில் முதல் 10 ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் 116 பந்துகளை சந்தித்து அதில் 135 ரன்கள் எடுத்திருந்தார். ஒருமுறை கூட சுழற்பந்துவீச்சாளர்களிடம் முதல் 10 ஓவர்களில் டிராவிஸ் ஹெட் ஆட்டம் இழந்தது இல்லை. ஆனால் முதன்முறையாக வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து இருக்கிறார்.

இது இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட் தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளில் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு தலைவலியாக இருந்துள்ளார். ஆனால், இந்த முறை 39 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறார். இந்திய அணியின் வில்லனாக பார்க்கப்படும் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தியதை ரசிகர்கள் கொண்டாடினர்.

Story first published: Tuesday, March 4, 2025, 16:42 [IST]
Other articles published on Mar 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+