Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை மீண்டும் மட்டம் தட்டிய மைக்கேல் வாஹன்.. ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக பேச்சு

லண்டன்: சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதை விட இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுவது தான் விறுவிறுப்பை எகிற வைத்திருக்கிறது. இரு அணிகளும் சம பலத்துடன் களத்தில் மோதும் போது அது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தருகிறது.

கிரிக்கெட் பசியில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்திய ஆஸ்திரேலிய போட்டிகள் எப்போதுமே ஒரு ஃபுல் மீல்ஸ் தான். இந்த நிலையில் இந்திய அணியை எப்போதுமே சீண்டி வரும் மைக்கேல் வாஹன், மீண்டும் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியை குறிப்பிட்டு தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

Ind vs aus Micheal Vaughan

அதில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டிகள் சமீப காலமாக கடும் சவால்களைத் தருகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் ஆசஸ் தொடரை விட இந்தியா, ஆஸ்திரேலியா போட்டிகள் ஒன்றும் பெரியது கிடையாது. அசஸ் தொடருக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் வரவேற்பும் அதற்கான ஆரம்ப கட்டப் பணிகளும் மிகவும் பெரியது.

ஆனால் இந்தியா போட்டிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அந்த அளவுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்காது. என்று மைக்கேல் வாகன் தெரிவித்திருக்கிறார். இதுபோன்று ஆசஸ் தொடர் குறித்து பேசிய அவர் ஆஸ்திரேலியா அணி தான் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் இரு அணிகளும் கோப்பைக்காக கடுமையாக முயற்சி செய்யும். இரு அணிகளும் இரண்டு போட்டிகளை வெற்றி பெறலாம் என்று நான் சொல்லலாமா? ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், கடந்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து அணி 2011ம் தொடரில் தான் அசஸ் கோப்பையை வென்றது.

இதேபோன்று 2002 -2003 சுற்றுப்பயணத்தில் நாங்கள் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு போட்டியில் வென்றோம். நாங்கள் மெதுவாக தான் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற தொடங்கி இருக்கின்றோம். எனவே இரண்டு போட்டிகளில் நாங்கள் அங்கு வென்றால் கூட அது எனக்கு மிகப்பெரிய விஷயம் தான் என்று மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

Story first published: Saturday, November 8, 2025, 12:32 [IST]
Other articles published on Nov 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+