இதை மட்டும் பண்ணு.. ரவி சாஸ்திரி சொன்ன மேஜிக் வார்த்தைகள்.. தாக்குர் அதிரடி ஆட்டம் ஆட காரணமே இதுதான்
பிரிஸ்பேன் : இந்திய அணி 186 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து இருந்தது. அப்போது களத்தில் இதற்கு முன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் ஆடி இராத இரண்டு இந்திய வீரர்கள் களத்தில் இருந்தனர்.
அதில் ஒருவர் வாஷிங்க்டன் சுந்தர். மற்றொருவர் ஷர்துல் தாக்குர். சுந்தர் ஆல்-ரவுண்டர். தாக்குர் பந்துவீச்சாளர் மட்டுமே.
தாக்குரின் உள்ளூர் போட்டி பேட்டிங் சராசரி 16 மட்டுமே. ஆனால், அவர் அதிரடியாக ஆடி 67 ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்க்ஸில் இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்தவர் அவர் தான்.

முக்கிய காரணம்
ஷர்துல் தாக்குர் இப்படி ஒரு ஆட்டம் ஆட முக்கிய காரணம் ரவி சாஸ்திரி தான். ஆம், ஷர்துல் பேட்டிங் செய்ய கிளம்பும் முன் ரவி சாஸ்திரி அவரை உற்சாகப்படுத்த ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார். அதை உணர்ந்த அவர் பேட்டிங்கில் கலக்கினார்.

ரவி சாஸ்திரி என்ன சொன்னார்?
ரவி சாஸ்திரி ஷர்துல் பேட்டிங் செய்ய கிளம்பும் முன், "ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு உன்னை பிடித்து விடும்" எனக் கூறி உள்ளார். இது உண்மையே. கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர்களை ஆஸ்திரேலியர்கள் பாராட்டத் தவறியதில்லை.

பாராட்டுவார்கள்
ஷர்துல் தாக்குர் பேட்டிங் செய்ய வரும் போது ஆஸ்திரேலிய ரசிகர்கள், தங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட் வீழ்த்துவதை பாராட்டி உற்சாகக் குரல் எழுப்பி வந்தனர். அவர்கள் தான் சிறப்பாக ஆடினாலும் பாராட்டுவார்கள் என்பதை மனதில் கொண்டு ஆடி இருக்கிறார் தாக்குர்.

சிக்ஸ்
தன் முதல் ரன்களை சிக்ஸ் அடித்து எடுத்து அப்போதே ஆஸ்திரேலிய ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். அதன் பின் தெளிவாக திட்டமிட்டு தவறான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அடித்து 67 ரன்கள் குவித்தார் ஷர்துல் தாக்குர்.


Click it and Unblock the Notifications