Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணை கசக்கிட்டு பார்த்தா.. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. இந்திய அணி ஸ்கோர்.. பாக். வீரர் விளாசல்!

அடிலெய்டு : இந்திய அணி குறைந்த டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஸ்கோரை பதிவு செய்த நிலையில், பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர் அதை கிண்டல் செய்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

36 ரன்கள்

36 ரன்கள்

இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 244 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸில் மிக மோசமாக சொதப்பியது. வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இந்திய டெஸ்ட் வரலாற்றில் இதுவே மிக மோசமான ஸ்கோர் ஆகும். ஆசிய அணிகள் வரலாற்றிலும் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்து இருந்தது இந்திய அணி. இதை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

369 ரன்கள்

369 ரன்கள்

அவர் அதை ஒரு கதையாக மாற்றி கூறி இருக்கிறார். "முந்தைய தினம் இரவு நான் போட்டியை பார்க்கவில்லை. காலையில் டிவியை போட்டுப் பார்த்தேன். இந்தியா 369 ரன்கள் எடுத்தது எடுத்து இருந்ததாக ஸ்கோர் போர்டு காட்டியது."

36 ரன்களுக்கு 9

36 ரன்களுக்கு 9

"அப்புறம் கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தேன். அது 36 ரன்களுக்கு 9 விக்கெட்கள் என தெரிந்தது. ஒருவர் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி விட்டார். இது அவமானகரமான தோல்வி. அவமானகரமான பேட்டிங். உலகின் வலிமையான அணி சரிந்து விழுந்தது" என்றார் அக்தர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மேலும், பாகிஸ்தான் அணியின் குறைந்த ஸ்கோரை இந்தியா முறியடித்து விட்டத்தை பெரிய மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி இருந்தார் அக்தர். இந்தியாவின் தோல்வி அவருக்கு ஆனந்தத்தை கொடுத்துள்ளது. எனினும், இப்படி பல முனைகளிலும் விமர்சனம் செய்யும் அளவுக்கு தான் இந்தியா பேட்டிங் உள்ளது.

Story first published: Saturday, December 19, 2020, 18:56 [IST]
Other articles published on Dec 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+