Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஸ்ரேயாஸ் ஐயர் அபார கேட்ச்.. மைதானத்தை விட்டு வெளியேறினார்.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனான ஸ்ரேயாஸ் ஒரு அபாரமான கேட்சை பிடித்து அசத்தினார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதுவரை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை ஆஸ்திரேலிய ஒயிட் வாஷ் செய்தது கிடையாது.

இந்த தருணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் சிட்னியில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

Shreyas Iyer

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடுகிறது. இதில் கேப்டன் மிச்சல் மார்ஸ் 41 ரன்களும், டிராவிஸ் ஹெட் 29 ரன்களும்,மேத்யூ ஷார்ட் 30 ரன்களும்,ரீன்ஷா அரைசதம் எடுத்து அபாரமாக விளையாடி ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை வீரரான அலெக்ஸ் காரி அபாரமாக விளையாடி வந்தார்.

ஒரு கட்டத்தில் 183 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் ஆஸ்திரேலிய அணி இருந்தது. அப்போது ஹர்ஷித் வீசிய ஓவரில் அலெக்ஸ் காரி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் பின்னால் நோக்கியே ஓடி வந்து அபாரமாக கேட்ச் பிடித்தார். அப்போது அவருடைய இடுப்பு மற்றும் முதுகு பகுதி மைதானத்தில் மோதியது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் பிடித்த பந்து அவரை விட்டு நழுவி சென்றது. ஆனால் இறுதி வரை பந்தை பத்திரமாக அவர் பிடித்து கேட்சை நிறைவு செய்தார்.

இதன் மூலம் அலெக்ஸ் காரி 24 ரன்களில் ஆட்டம் இழந்தார். கேட்ச் பிடித்து முடித்தவுடன் ஸ்ரேயாஸ்க்கு முதுகில் வலி ஏற்பட்டது. ஏற்கனவே அவர் முதுகில் காயம் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால் மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர் அப்போதும் அவருடைய வழி தீரவில்லை. இதனை அடுத்து மைதானத்திலிருந்து அவர் வெளியேறினார். இதனால் பேட்டிங் செய்ய ஸ்ரேயாஸ் மீண்டும் களத்திற்கு வருவாரா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஒருநாள் தொடரில் மட்டும் தான் ஸ்ரேயாஸ் இடம் பெற்றிருக்கிறார். டி20 தொடரில் அவர் விளையாடவில்லை என்பதால் எந்த பாதிப்பும் இருக்காது.

Story first published: Saturday, October 25, 2025, 12:32 [IST]
Other articles published on Oct 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+