For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரேக் எடுத்ததற்கான காரணம் என்ன? ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்

அடிலெய்ட்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தாம் கொஞ்சம் பிரேக் எடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அரை சதம் அடித்திருந்தார்.

தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரிக்கெட்டிலிருந்து பிரேக் எடுத்ததற்கான விளக்கம் குறித்து தெரிவித்துள்ளார். அது குறித்து பேசிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அதிக நேரம் பில்டிங் செய்யும் நிலை இருக்கிறது.

Shreyas Iyer

இதன் மூலம் என்னுடைய உத்வேகம் குறைவதாக நான் நினைக்கின்றேன். சர்வதேச கிரிக்கெட்டில் என்னுடைய உத்வேகம் குறைந்தார். அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தவரை ஓய்வு எடுக்க முடியும். ஓய்வில் இருந்து மீள்வதற்கான நேரமும் கிடைக்கும்.

இதனை நாம் சிறப்பாக கையாளலாம். அதனால் தான் இந்த ஒரு முடிவை நான் எடுத்திருக்கின்றேன். தற்போது என்னுடைய பேட்டிங் யுத்திகளில் நான் சில மாற்றங்களை செய்து இருக்கின்றேன். இந்த மாற்றங்களை நான் சமீப காலமாக தான் செய்தேன். தவிர திடீரென்று உடனே எடுக்கவில்லை. கடந்த ஆண்டு பேட்டிங் செய்யும் முறையில் கொஞ்சம் நிற்கும் பொசிஷனை மாற்றி இருக்கின்றேன்.

இதன் மூலம் பந்தின் பவுன்சை என்னால் எதிர்கொண்டு விளையாட முடியும். என்னுடைய பயிற்சியாளருடன் இணைந்து நான் இந்த யுத்தியை பின்பற்றினேன். இது எனக்கு பொருத்தமாக இருக்கின்றது. தற்போது என்னுடைய பழைய பேட்டிங் யுத்தியையும் பின்பற்றி பார்த்தேன். அது எவ்வாறு பயன் தருகிறது என்று சோதனை செய்தேன்.

மும்பையிலும் நாங்கள் செம்மண்ணால் உருவாக்கப்படும். ஆடுகளங்களில் தான் விளையாடுவோம். அத்தகைய ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எனவே என்னுடைய புதிய பேட்டிங் எப்படி கை கொடுத்தது, ஹேசல்வுட் சிறப்பாக பந்து வீசினார். நாங்கள் பேட்டிங் செய்யும்போது நாங்கள் சேர்ப்பது அவ்வளவு ஈசியாக இல்லை. முடிந்தவரை ரன் குவிப்பில் ஈடுபட்டு அதிக அளவு சிங்கிள்ஸ் எடுக்க வேண்டும் என்று முயற்சித்தோம். ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கோன்லியை எனக்கு முன்பு இழந்து தெரியும். அவர் அபாரமாக விளையாடி வருகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று ஸ்ரேயாஸ் கூறினார்.

Story first published: Thursday, October 23, 2025, 23:58 [IST]
Other articles published on Oct 23, 2025
English summary
Ind vs Aus- Shreyas Iyer reveals Why He takes a break at Test Match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+