Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: சுப்மன் கில்லை குறை சொல்லாதீங்க.. டி20யில் அவர் தங்கம் போன்றவர்.. முன்னாள் வீரர் கருத்து

மும்பை: இந்திய டி20 அணியில் சுப்மன் கில் இடம் பிடித்திருப்பதை பலரும் விமர்சித்து வருவதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வருண் அரோன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதிய மூன்றாவது t20 போட்டியில் சுப்மன் கில் 39 பந்துகளை எதிர் கொண்டு 46 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

மேலும் இந்த போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கில்லின் இன்னிங்ஸ் பெரிய விமர்சனத்தை பெறவில்லை. ஆனால் கில் பேட்டிங்கில் மெதுவாக விளையாடி வருவது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Shubman Gill

அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 117 என்ற அளவில் இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வருண் அரோன், டி20 கிரிக்கெட்டில் கில் ஏன் விளையாடுகிறார் என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள். அதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாத நிலையில் கண்டிப்பாக அணிக்கு தேவைப்படுவார்.

அதுபோல சூழலில் நான் கில் மீது பந்தயம் கட்டுவேன். ஏனென்றால் அவருடைய பேட்டிங் யுத்தி விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு, ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற கவனம் அனைத்தும் கில்லை ஒரு பலம் வாய்ந்த பேட்டராக மாற்றிவிடும். ஆடுகளத்தில் நாம் எவ்வாறு விளையாடு வேண்டும்.

எந்த ஷாட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் கில் சரியாக பயன்படுத்துவார். அதற்கு ஏற்ற வகையில் கில் விளையாடுவார். டி20 கிரிக்கெட்டில் இப்படிப்பட்ட ஒரு பேட்ஸ்மேனும் அணிக்கு கண்டிப்பாக தேவை. நான்காவது டி20 போட்டியில் பார்த்தீர்கள் என்றால் அனைத்து வீரர்களும் அந்த ஆடுகளத்தில் தடுமாறினார்கள்.

ஆனால் கில் 46 ரன்கள் சேர்த்தார். இப்படிப்பட்ட சூழலில் அந்த இன்னிங்ஸ் ஒரு தங்கம் போன்றது. இதேபோன்று பும்ராவும் ஆர்ஸ்தீப் சிங்கும் எப்போதும் டி20 கிரிக்கெட்டில் பிளேயிங் லெவனின் சேர்ந்து விளையாட வேண்டும். இருவரும் இணைந்தால் நிச்சயம் எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். பும்ராவை பவர் பிளேவில் இரண்டு ஓவர்களை பயன்படுத்துங்கள். அதை போல் டெத் ஓவர்களில் இரண்டு ஓவர்களை பயன்படுத்துங்கள். அதுதான் சரியாக இருக்கும் என்று வருண் அரோன் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, November 8, 2025, 12:09 [IST]
Other articles published on Nov 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+