Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: கில் கேப்டன்ஷி ஏமாற்றம் அளிக்கிறது.. அரைகுறை பவுலர்களால் வெற்றி கிடைக்காது-முகமது கையிப்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் நிறைய அரைகுறை பவுலர்கள் தான் இருந்ததாகவும் முழுமையான பவுலர்கள் யாரும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

அதேபோன்று இந்திய அணியின் தலைசிறந்த பவுலராக விளங்கும். குல்தீப் அணியில் சேர்க்காதது மிகப்பெரிய தவறு என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது விளையாடும் அணியில் பல பார்ட் டைம் பவுலர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.

Ind vs aus Shubman gill Mohammed kaif

இதை தவிர முழுமையான பவுலர்கள் யாரும் இல்லை. நிதிஷ் குமார் ரெட்டி ஒரு முழுமையான பவுலர் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஆடுகளத்தில் சுந்தர் கூட எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஹர்ஷித் ராணாவும் மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்தார். இது போன்ற ஆடுகளத்தில் ஆட்டத்தை திருப்பும் வல்லமை பௌலர்களுக்கு இருந்தது.

ஆனால் நாம் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. யார் தான் இதற்கு பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். பும்ராவும், சமியும் விளையாடும் போது மட்டும்தான் இந்தியா வெற்றி பெறுமா மற்ற நேரத்தில் நாம் வெற்றியை எதிர்பார்க்கக் கூடாதா கில்லுக்கு இந்த ஒரு நாள் தொடர் ஒரு மிகப்பெரிய பரிட்சையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.

குல்தீப் யாதவ் போன்ற ஒரு விக்கெட் எடுக்கும் பவுலர்களை அவர் சேர்க்கவில்லை. அனைத்து விஷயத்தையும் சரி செய்ய வேண்டும் என நினைத்து முக்கியமான ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார். ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் வார்னே போன்ற பவுலர்கள் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.

குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் குஹான்மென் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் நாம் குல்தீப் சேர்க்கவில்லை. நாம் திறனுக்கு முன்னுரிமை அளிப்பதை விட எண்ணிக்கைக்கு தான் முன்னுரிமை தருகிறோம் என்று முகமது கையிப் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, October 21, 2025, 7:40 [IST]
Other articles published on Oct 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+