Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில்லிடம் இந்த பிரச்சினை இருக்கு! கில்கிறிஸ்ட் ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க- யுவராஜ் தந்தை அறிவுரை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசராக இருக்கப் போகும் வீரர் என அறியப்பட்ட சுப்மன் கில், தற்போது ஆசியாவுக்கு வெளியே நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தடுமாறி வருகிறார். இதுவரை ஆசியாவுக்கு வெளியில் ஒரே ஒரு முறை தான் அரை சதம் அடித்திருக்கிறார்.

புஜாரா போன்ற வீரரின் இடத்தில் விளையாடும்போது அவரின் திறமையை ஒரு சதவீதம் கூட களத்தில் பிரதிபலிப்பது கிடையாது. இந்திய மண்ணில் நன்றாக விளையாடினாலும் வெளிநாட்டில் தடுமாறி வருகிறார்.

ind vs aus shubman gill border gavaskar trophy india vs australia vs

இந்த நிலையில் கில்லிடம் இருக்கும் ஒரு பிரச்சனை குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் சிங் குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கில்கிறிஸ்ட், எப்போதுமே பின் கையில் உள்ள பலத்தை வைத்து பந்துகளை அடிப்பார். இது சில சமயம் ரன் சேர்க்க கைகூடாது.

இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக கில்கிறிஸ்ட் ஒரு வினோத ஐடியாவை பயன்படுத்தினார். 2007 உலக கோப்பை இறுதிப் போட்டியின் போது சிறிய அளவிலான ஸ்குவாஷ் பந்தை தனது கையுரையில் வைத்துக்கொண்டார். இதன் மூலம் பேட்டை நன்றாக பிடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பின் கையில் பலத்தை அது குறைக்க உதவும்.

இதனை பயன்படுத்தி கில்கிறிஸ்ட் சதம் அடித்தார். தற்போது சுப்மன் கில்லுக்கு இதே போல் ஒரு பிரச்சனை இருக்கிறது. அவர் பின் கையில் பலத்தைக் கொண்டு விளையாடுகிறார். இது கிரிக்கெட்டின் அடிப்படை விதிக்கு எதிரானது. இப்படி ஒரு பிரச்சனையை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் ரன்கள் சேர்க்க முடியாது.கில்லிடம் இந்த பிரச்சனை இருக்கிறது என்று நான் அடிக்கடி சொல்கிறேன்.

எனவே கில்கிறிஸ்ட், போலவே அவரும் இந்த ஐடியாவை பின்பற்ற வேண்டும். இந்தப் பிரச்சினையை மட்டும் அவர் சரி செய்து கொண்டால் அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக விளங்குவார் என்று யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கில் விளையாட வருவார். அப்போது யுவராஜ் சிங் உடன் நல்ல நட்பில் இருந்த நிலையில் தற்போது அவருடைய தந்தையே கில்லுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 23, 2024, 16:11 [IST]
Other articles published on Dec 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+