Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் வேஸ்ட்.. இந்திய பிட்சில் யார் வேண்டுமானாலும் ரன்கள் அடிக்கலாம்.. கொந்தளித்த ஸ்ரீகாந்த்!

சிட்னி: இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில்லுக்கு அளவிற்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்கப்படுவதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இந்திய மைதானங்களில் யார் வேண்டுமானாலும் ரன்களை குவிக்கலாம் என்று கூறியுள்ள அவர், வெளிநாடுகளில் சுப்மன் கில் ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்ததால் 3-1 என்ற கணக்கில் தொடரை இழந்து இந்திய அணி பரிதாபமான நிலையில் உள்ளது. இந்த டெஸ்ட் தொடரிலும் சுப்மன் கில் ஆடிய விதம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ind vs aus yashasvi jaiswal shubman gill vs

ஏனென்றால் கடந்த 3 ஆண்டுகளில் சுப்மன் கில் வெளிநாடுகளில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒரு இன்னிங்ஸில் கூட 40 ரன்களை சுப்மன் கில் சேர்க்கவில்லை. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்த் பேசுகையில், சுப்மன் கில் ஒரு ஓவர் ரேட்டட் கிரிக்கெட் வீரர். அவரால் வெளிநாடுகளில் ரன்கள் சேர்க்க முடியவில்லை.

இவருக்கு பதிலாக இஷான் கிஷன் இருந்திருந்தால் கூட ஏதாவது ஒரு இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை பதிவு செய்திருப்பார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் கேப்டன்சியை செய்தவர்கள். ஆனாலும் மீண்டும் பொறுப்பு கேப்டன்சி விராட் கோலியிடம் தான் அளிக்கப்பட்டது.

இதற்கு பின் இருக்கும் காரணமே புரியவில்லை. இந்திய மண்ணில் எந்த கிரிக்கெட் வேண்டுமானாலும் ரன்களை குவிக்க முடியும். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் ரன்கள் குவிக்கிறார்களா என்பதே முக்கியம். 10 போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தால் எந்த வீரர் வேண்டுமானாலும் ஒரு போட்டியில் நிச்சயம் ரன்களை அடிப்பார்கள். அதனை தான் சுப்மன் கில் செய்து வருகிறார்.

அவருக்கு அளவிற்கு அதிகமாக வாய்ப்புகளை பிசிசிஐ வழங்கி வருகிறது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என்று 3 வடிவங்களில் வெவ்வேறானவை. அதற்கேற்ப இந்திய அணியை கட்டமைக்க வேண்டும். பும்ராவுக்கு நிகரான மாற்று பவுலரை இந்திய அணி தயார் செய்ய வேண்டும். ருதுராஜ், சாய் சுதர்சன் போன்ற டாப் ஆர்டர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, January 5, 2025, 22:39 [IST]
Other articles published on Jan 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+