Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: சுப்மன் கில்லை வெளியே அனுப்பும் கம்பீர்.. 2 ஸ்டார் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க திட்டம்

பிரிஸ்பேன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி நாளை சனிக்கிழமை பிரிஸ்பேன் நகரில் மதியம் 1:45 மணிக்கு தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் போட்டி மழையால் ரத்தாகி இருக்கிறது. இதனால் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் கடைசி டி20 போட்டியில் வெல்ல வேண்டும். இந்த தொடரை சமன் செய்ய வேண்டுமென்றால், ஆஸ்திரேலிய அணியில் கடைசி போட்டியில் வெல்ல வேண்டும்.

Shubman gill

இதனால் இரு அணிகளும் வெற்றிக்கு போராடும் என்பதால் கடைசிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் பல சீனியர் வீரர்கள் ஆசஸ் தொடருக்கு தயாராகும் விதமாக வெளியேறி இருக்கிறார்கள். இதனால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் டாப் பரிசை வீரர்கள் தடுமாறி வருகிறார்கள்.

குறிப்பாக கில் தொடர்ந்து மெதுவாக விளையாடி வருகிறார். டி20 போட்டிக்கு ஏற்ற வகையில் அவருடைய ஆட்டம் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் கம்பீர் பேட்டிங் வரிசையில் மியூசிக் சேர் நடத்துவது போல் ஆட்களை மாற்றி மாற்றி அனுப்பி வருகிறார். இதுவும் இந்திய அணிக்கு ஒரு தலைவலியாக மாறி இருக்கிறது.

இதனால் நாளை ஆட்டத்தில் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. இதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ஜித்தேஷ் சர்மா, கடந்த போட்டியில் வெறும் மூன்று ரன்கள் தான் எடுத்தார். இதனால் அவர் நீக்கப்பட்டு ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

இந்த தொடர் முழுவதும் ரிங்கு சிங் மட்டும்தான் இன்னும் ஒரு போட்டின் கூட விளையாடவில்லை. இதனால், கடைசி டி20 ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கில் டி20க்கு ஏற்ற வகையில் விளையாடவில்லை என்றும் இதனால் அவருக்கு அணியில் இடம் வழங்கக் கூடாது என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் கில்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முடிவில் பிசிசிஐ இருப்பதால் அவர் அணியை விட்டு நீக்கப்பட மாட்டார் என்றும் வேண்டுமானால், கடைசி போட்டியில் ஓய்வு என்ற பெயரில் அவர் வெளியே உட்கார வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Story first published: Friday, November 7, 2025, 11:20 [IST]
Other articles published on Nov 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+