Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: டி20 உலககோப்பையில் சுப்மன் கில் விளையாட மாட்டார்.. முன்னாள் ஆர்சிபி வீரர் கருத்து

மும்பை: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் பேட்டிங்கில் தடுமாறினால் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அவர் பங்கேற்பதில் சந்தேகம் தானே என முன்னாள் கிரிக்கெட் வீரர் முஹமது கையிப் தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் தொடக்க வீராக விளையாடிய கில் வெறும் 117 ஸ்ட்ரைக் ரைட்டில் தான் விளையாடினார். எனினும் இந்திய பவுலர்களின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.

Shubman Gill

இதனால் இந்தியா செய்த தவறு வெளியே தெரியாமல் போய்விட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது கையிப், சஞ்சு சாம்சன் மட்டும் தற்போது அணியில் தொடக்க வீரராக விளையாடி இருந்தால் எந்தவித ஒரு குழப்பமும் தற்போது ஏற்பட்டிருக்காது. இதற்கு காரணம் தற்போது துணை கேப்டனாக கில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர் அனைத்து போட்டியிலும் விளையாடி வருகிறார்.

இதன் காரணமாக சஞ்சு சாம்சன் ஓரங்கட்டப்பட்டுள்ளார். தற்பொழுது ஜித்தேஸ் சர்மாவை ஐந்தாவது அல்லது ஆறாவது வீரராக பயன்படுத்துகிறார்கள். இதனால் சஞ்சு சாம்சனுக்கு அங்கேயும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிர்கால கேப்டனாக கில்லை பிசிசிஐ தேர்வு செய்திருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது.

ஆனால் சஞ்சு சாம்சன் ஸ்ட்ரைக் ரைட்டை பாருங்கள். அவர் 150 என்ற அளவில் வைத்திருக்கிறார். ஆனால் பேட்டிங் வரிசையில் உள்ள இடத்திற்கு தேவையான வீரர்களை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். கில் நல்ல வீரர் கிடையாது என்று நான் சொல்லவே இல்லை. ஆனால் அவரை தேவையில்லாமல் இந்திய அணி t20 கிரிக்கெட்டில் ஆதரவு அளித்து வருகிறது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடினாலும் டி20 கிரிக்கெட்டில் தனது சிறந்த பார்மை மீட்க அவர் போராடி வருகிறார். கில் இதுவரை டி20 கிரிக்கெட்டில் பெரிய இன்னிங்ஸ் ஒன்றும் ஆடவில்லை . உலக கோப்பைக்கு முன்பு இன்னும் நிறைய போட்டிகள் இருக்கிறது. ஆனால் அதற்குள் ஆட்டநாயகன் அல்லது தொடர் நாயகன் விருதை வெல்லும் அளவுக்கு அவருடைய செயல்பாடு இருக்க வேண்டும்.

அப்படி நடந்தால் யாரும் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் பற்றி பேச மாட்டார்கள். ஒருவேளை தென்னாப்பிரிக்கா தொடரில் கில்லுக்கு ஓய்வு வழங்கப்பட்டால் ஜெய்ஸ்வால் அல்லது சஞ்சு சாம்சன் தொடக்க வீரர்களாக வருவார்கள். இதன் மூலம் உலக கோப்பைக்கு முன்பு நமக்கு தெளிவான ஒரு முடிவு கிடைத்துவிடும் என்று முகமது கையிப் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் 4 இன்னிங்ஸ் விளையாடிய கில் மொத்தமாக 103 ரன்கள் அடித்து இருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 127 என்று அளவில் இருக்கிறது.

Story first published: Friday, November 7, 2025, 14:39 [IST]
Other articles published on Nov 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+