Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி தரப்பட்ட விவகாரம்.. இந்திய அணிக்கு ஆப்பாக மாறும்.. முகமது கையிப் கருத்து

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் கடந்த இங்கிலாந்து தொடரிலிருந்து செயல்பட்டு வரும் நிலையில், டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த தருணத்தில் வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சுப்மன் கில்லும் இந்திய அணி கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் டெஸ்ட் ஒரு நாள் என இரண்டு பிரிவிலும் கீழ் தான் கேப்டனாக இருக்கப் போகிறார். ரோகித் சர்மாவும் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சுப்மன் கில்லுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து முன்னாள் வீரன் கைஃப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Shubman gill

இது குறித்து பேசிய அவர், கில்லுக்கு ஒரு நாள் அணியின் கேப்டன் பதவி வழங்கப்படும் என்பது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் 2027 உலக கோப்பைக்கு பிறகு இந்த முடிவு கொண்டுவரப்படும் என்று நினைத்தேன். நிச்சயமாக கில்லுக்கு அதற்கான திறமையும் இருக்கின்றது. உடல் பகுதிலும் அவர் சிறப்பாக இருக்கின்றார்.

எனவே 2027 உலக கோப்பை தொடரில் அவர் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆனால் சுப்மன் கில்லுக்கு தற்போது அதிக அளவு சுமை ஏற்றப்படுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. அவருக்கு அனைத்துமே மிகவும் விரைவாக தரப்படுகிறது. எனவே இந்த சுமையை தாங்க முடியாமல் அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

குறுகிய காலகட்டத்தில் அதிக பொறுப்பு வந்தால் அது நிச்சயம் அவருடைய பேட்டிங் செயல்பாட்டை பாதிக்க வைக்கும். என்னுடைய கோரிக்கை என்னவென்றால் அவருக்கு அதிக அளவிலான சுமையை கொடுக்காதீர்கள். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகவும் பேட்டிங்கில் நம்பர் நான்காவது வீரராகவும் விளையாடுகிறார். அதுமட்டுமல்லாமல் டி20 அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சூரியகுமார் விலகிய பிறகு அவர் டி20 கேப்டனாக மாறுவார். தற்போது நீங்கள் ஒருநாள் போட்டியிலும் அவரை கேப்டனாக மாற்றி இருக்கிறீர்கள். எனவே அனைத்துமே வேகவேகமாக நடத்தப்படுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. எந்த ஒரு வீரரும் எனக்கு கேப்டன் பதவி கொடுங்கள் என்று கேட்க மாட்டார்கள். அவர் கேப்டன் பதவி வேண்டும் என்று சொல்லவும் இல்லை.

ஆனால் தற்போது சூழ்நிலை பார்க்கும்போது அனைவரும் கில்லை கேப்டனாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள் என தோன்றுகிறது. இது போன்ற தேர்வு குழு உறுப்பினர்களும் கில்லுக்கு அழுத்தம் தருகிறார்கள் என்று முகமது கைஃப் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது.இதில் தனது கேப்டன் பதவியை கில் தொடங்குவார்.

Story first published: Monday, October 6, 2025, 20:26 [IST]
Other articles published on Oct 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+