IND vs AUS: 10 இன்னிங்சில் 200 ரன்கள் கூட அடிக்கல.. சுப்மன் கில்லை அணியை விட்டு நீக்குங்க.. இர்பான் பதான்
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்படும் சுப்மன் கில், 10 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் கில், மீது கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
இது குறித்து விமர்சனம் செய்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கில் தொடர்ந்து ஒரே மாதிரியாக ரன்களை சேர்க்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது ஏனென்றால் ஜெய்ஸ்வால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என விளையாடாமல் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட திறமை வாய்ந்த வீரர் பல அதிசயங்களை அணிக்காக செய்வார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாளால் இரட்டை சதம் கூட அடிக்க முடியும். அப்படிப்பட்ட நல்ல வீரர் டி20 போட்டியில் சதம் அடிக்கக்கூடிய திறமை இருந்தும் வாய்ப்புக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்.
எனவே இந்த விஷயத்தில் இந்திய நிர்வாகம் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார். நடப்பாண்டில் கில் 9 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 169 ரன்களை அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 24 என்று அளவில் இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 148 என்ற அளவில் இருக்கிறது. அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதுவரை கில் 30 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி மொத்தமாக 747 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 28 ஆகும். இதில் கில் ஸ்டரைக்ரேட் 141 என்ற அளவில் இருக்கிறது. இதுவரை மூன்று அரை சதம், ஒரு சதம் அடித்திருக்கிறார். அதுவே ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக 22 இன்னிங்சில் 723 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 36 என்று அளவில் இருக்கின்றது. ஸ்டரைக் ரேட்164 என்று அளவிலும்ழ் ஐந்து அரை சதம்,ஒரு சதமும் ஜெய்ஸ்வால் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications