Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: டெஸ்ட் இன்னிங்ஸ் போல் விளையாடும் சுப்மன் கில்.. தடுமாறும் இந்திய அணி

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர் சுப்மன் கில் டெஸ்டிங் இன்னிங்ஸ் போல் விளையாடி வருவது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்திருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நிலைக்கு சர்வதேச கிரிக்கெட் மாறிவிட்டது.

ஆனால் கில், கேஎல் ராகுல் போன்றவர்கள் தொடக்க வீரர்களாக மிகவும் மெதுவாக ரன்களை சேர்ப்பதாக கூறி அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதன் காரணமாகத்தான் டி20 போட்டியில் இருந்து கில் நீக்கப்பட்டிருந்தால் கடந்த 2024 டி20 உலக கோப்பையில் கூட அவர் மெயின் அணியில் இடம்பெறவில்லை.

Shubman gill

இந்த நிலையில் கம்பீர் தேவை இல்லாமல் கில்லை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தார். ஆனால் மீண்டும் பழைய மாதிரி மெதுவாகவே கில் விளையாடி வருகிறார். இது இந்தியாவின் ஆட்டத்திறனை வெகுவாக பாதிக்கிறது. கில் 13 புள்ளி 1 ஓவர் முடிவில் 35 பந்துகள் எதிர்கொண்டு வெறும் 37 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

வெறும் நான்கு பவுண்டரி தான் இதில் அடங்கும். இந்த கட்டத்தில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 105 என்ற நிலையில் தான் இருந்தது. அப்போது கில் ஒரு சிக்ஸர் அடிக்க 39 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து பெவிலின் திரும்பினார். கில் இப்படி மெதுவாக விளையாடுவதன் மூலம் அபிஷேக் ஷர்மாவுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது.

இதனால் அவர் இன்னும் வேகமாக விளையாட முயற்சி செய்து ஆட்டம் இழந்து வருகிறார். கில் தன்னுடைய பேட்டிங் வேகத்தை ஆரம்பத்தில் இருந்து அதிகரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கில் ஆட்டத்திறனை பார்க்கும்போது விராட் கோலி எப்படி ஆரம்பத்தில் சில பந்துகளை வீணடித்துவிட்டு பின்னர் அதிரடி காட்டி ரன்களை சேர்ப்பாரோ, அதே போல் ஆட முற்படுவதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் மாறிவரும் கிரிக்கெட் போட்டிக்கு கில்லின் ஆட்ட்ம் சரி வராது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கில் இப்படி மெதுவாக தான் விளையாடுவார் என்றால் அதற்கு அதிரடியாக ஆடக்கூடிய ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை தேர்வு செய்யலாமே என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, November 6, 2025, 15:10 [IST]
Other articles published on Nov 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+