Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவுட் கேட்டா கொடுத்துருவீங்களா? அதிர்ந்து போன இந்திய வீரர்.. பயிற்சி போட்டியில் நடந்த பரபர சம்பவம்!

சிட்னி : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இளம் வீரர் ஷுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் ஆடி வந்தார்.

அவர் அவுட்டே ஆகாத நிலையில் அவருக்கு அவுட் கொடுத்ததாக சர்ச்சை வெடித்தது.

ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்ட உடன் அம்பயர் தவறான முடிவை எடுத்ததாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய அணி பயிற்சிப் போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் பயிற்சிப் போட்டியில் இந்திய அணி மோசமாக செயல்பட்டு இருந்தது. பேட்டிங்கில் பல வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றி இருந்தனர்.

பகல் இரவு டெஸ்ட்

பகல் இரவு டெஸ்ட்

இந்த நிலையில், இரண்டாவது பயிற்சிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில் பகல் இரவு பயிற்சிப் போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா ஆட்டம்

இந்தியா ஆட்டம்

ஷுப்மன் கில் 43, ப்ரித்வி ஷா 40, பும்ரா 55 ரன்கள் குவித்து இருந்தனர். அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. ப்ரித்வி ஷா டக் அவுட் ஆனார். மயங்க் அகர்வால் 61 ரன்கள் குவித்தார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் அதிரடி ஆட்டம் ஆடி தெறிக்க விட்டார் ஷுப்மன் கில். 78 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அவர் சதத்தை நோக்கி தான் ஆடி வந்தார், ஆனால், அம்பயரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

பந்தை அடிக்கவில்லை

பந்தை அடிக்கவில்லை

மிட்செல் ஸ்வெப்சன் வீசிய பந்தை அவர் அடிக்காமல் விட்டார். அந்த பந்து லெக் திசையில் வந்தது. எனவே, எப்படியும் எல்பிடபுள்யூ ஆக மாட்டோம் என்ற நம்பிக்கையில் அவர் அந்த பந்தை அடிக்காமல் பேட்டை மேலே தூக்கினார்.

கேட்ச்?

கேட்ச்?

ஸ்வெப்சன் பந்து அவர் காலில் பட்டதாக எண்ணி அவுட் கேட்டார். அம்பயர் மறுத்தார். அதே சமயம், பந்தை கேட்ச் பிடித்ததாக ஸ்லிப்பில் நின்று இருந்தார் ஸீன் அபாட் அவுட் கேட்டார். அப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் அது அவுட் தான் உறுதியாக கொண்டாடினர்.

அவுட் கொடுத்த அம்பயர்

அவுட் கொடுத்த அம்பயர்

அம்பயர் அப்போது அவுட் கொடுத்து விட்டார். ஆனால், பந்து பேட்டில் படவில்லை என உறுதியாக இருந்த ஷுப்மன் கில் கடும் ஏமாற்றம் அடைந்தார். அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும், இது பயிற்சிப் போட்டி என்பதால் ரிவ்யூ கேட்க முடியாமல் வெளியேறினார்.

அவுட் தானா?

அவுட் தானா?

ஒளிபரப்பிலும் இது அவுட் தானா என உறுதியாக காட்ட முடியவில்லை. அதிக கேமராக்கள் இல்லாததாலும், ரிவ்யூ பார்க்க தேவையான அல்ட்ராஎட்ஜ் உள்ளிட்ட டெக்னாலஜிக்களும் பயன்படுத்தவில்லை என்பதால் அம்பயர் தீர்ப்பு சரியா? என பார்க்க முடியவில்லை.

Story first published: Saturday, December 12, 2020, 14:20 [IST]
Other articles published on Dec 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+