புதிய பந்தில் புரட்டி எடுத்த சிராஜ்.. எதிர்பார்க்காத ஆஸி. பேட்ஸ்மேன்கள்.. களத்தில் மாஸ் சம்பவம்
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். பழைய பந்தில் விக்கெட் எடுக்கும் சிராஜ் இன்று புதிய பந்திலேயே ஆட்டம் காட்டி வருகிறார்.
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற இந்திய அணி திட்டமிட்டுள்ளது. இதுக்கு இவ்வளவு சீனா.. பாதி பிட்னசோடு களமிறங்கிய வீரர்.. 10 நிமிடத்தில் காலி செய்த இந்திய பவுலர்!
ஆனால் இந்த போட்டி மழை காரணமாக தடைபட்டு உள்ளது. கடந்த 4 மணி நேரமாக மழை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

எப்படி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இந்த போட்டியில் இந்திய அணியின் ஸ்பீட் பவுலிங் ஆர்டர் அவ்வளவு வலிமையாக இல்லை. பும்ரா மட்டுமே இன்று ஆடும் வீரர்களில் அனுபவம் உள்ளவர்.

சைனி
மற்றபடி சிராஜ், சைனி இரண்டு பேருக்கும் இது முதல் டெஸ்ட் தொடர் ஆகும். இதனால் இந்திய அணியின் பாஸ்ட் பவுலிங் எப்படி இருக்கும் என்று கேள்வி நிலவியது. பும்ரா, அஸ்வினை மட்டுமே நம்பி இந்திய அணி இருக்குமோ என்று கேள்வி நிலவி வந்தது.

சிராஜ்
சிராஜ் கடந்த போட்டியில் நன்றாக பவுலிங் செய்து இருந்தாலும் அவரின் பவுலிங் இந்த போட்டியில் எப்படி இருக்குமோ என்று கேள்வி எழுந்தது. அதிலும் சிராஜ் பழைய பந்தில் விக்கெட் எடுப்பார் என்பதால் இன்று தொடக்கத்தில் யார் ஓவர் போடுவார் என்று கேள்வி நிலவியது.

ஆனால்
சிராஜ் இன்று புதிய பந்திலேயே ஆட்டம் காட்டி வருகிறார். புதிய பந்திலேயே சிராஜ் சிறப்பாக ஸ்விங் செய்து வருகிறார். இவரின் பவுலிங்கில் ஆஸ்திரேலிய ஒப்பனர்கள் வில் புக்கோவஸ்கி, வார்னர் இருவரும் திணறினார்கள். அதிலும் வார்னர் வெறும் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

சிறப்பான தொடக்கம்
இதன் மூலம் சிராஜுக்கு இது மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடராக மாறியுள்ளது. அறிமுக தொடரிலேயே சிராஜ் பெரிய அளவில் நம்பிக்கை அளித்து வருகிறார். இந்திய டெஸ்ட் அணியில் நீடித்த வாய்ப்பு பெறுவதற்கான அடித்தளத்தை சிராஜ் உறுதியாக அமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications