For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லாபஷ்சேனுக்கு சிராஜ் போட்ட மந்திரம்.. பைல்ஸை மாற்றி வைத்து கிண்டல்.. அப்புறம் நடந்தது தான் டிவிஸ்ட்!

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இரண்டு செஷன்களில் பெரிய அளவு விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறியது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டி டெஸ்ட் இதுவரை முடிவடைந்து இருக்கிறது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ind vs aus virat kohli sam konstas boxing day test vs

குறிப்பாக அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். உஸ்மான் கவஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்து வந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு லாபஸ்சேன் கவாஜா ஜோடி நிதானமாக விளையாடி இந்திய அணி வீரர்களை வெறுப்பில் ஆழ்த்தினர்.

இந்த சூழலில் தான் முகமது சிராஜ் ஒரு மந்திரத்தை போட்டார். அதாவது இந்திய அணி வீரர்கள் பந்து வீசும் போது விக்கெட் கிடைக்கவில்லை என்றால் ஸ்டெம்பில் இருக்கும் பைல்ஸை மாற்றி வைப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு செய்யும் போது விக்கெட்டுகள் விழுகின்றன. இந்த மூடநம்பிக்கையை இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.

கடந்த டெஸ்ட் போட்டியில் கூட இது பைல்சை மாற்றி வைத்து இந்திய அணி விக்கெட்டை எடுத்தது. இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் லாபஸ்சென் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிராஜ் திடீரென்று வந்து பைல்ஸை மாற்றி வைத்தார். இதனை லாபஸ்சென் பார்க்காமல் விலகி சென்றார்.

உடனே சிராஜ் மார்னஸ் இதை பாரு என்று கூறிய அவரை கிண்டல் செய்தார். எனினும் மார்னஸ் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் சிராஜுக்கு விக்கெட் விழவில்லை என்றாலும் அடுத்தது புமரா பந்துவீச்சில் உஸ்மான் கவஜா ஆட்டம் இழந்தார். பும்ரா வீசிய மோசமான பந்துகளில் ஒன்றாக அது அமைந்தும் உஸ்மான் கவாஜா அடித்த ஷார்ட் கேட்ச்சாக மாறியது. இதனை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் முகமது சிராஜ் போட்ட மந்திரம் லாபர்சனுக்கு பழிக்காமல் உஸ்மான் கவாஜாவுக்கு பலித்து விட்டதாக கூறி கிண்டல் செய்து வருகின்றனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருக்கிறது.

Story first published: Thursday, December 26, 2024, 16:58 [IST]
Other articles published on Dec 26, 2024
English summary
Ind vs aus- Siraj changed the biles and trolls Marnus labuschagne but usman khawaja pays the price Ind vs aus, virat kohli, sam konstas, boxing day test, இந்தியா vs ஆஸ்திரேலியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+