Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸை விட இது ரொம்ப பெருசு.. ஸ்மித் & வார்னர்கூறிய வார்த்தைகள்.. ஆஸி, தொடர் மீது எகிறிய எதிர்பார்ப்பு

நாக்பூர்: இங்கிலாந்து அணியுடன் ஆஷஸ் தொடரை வெல்வதை விட இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை வெல்வது தான் மிகவும் சவாலானது என்றும், மலையை விட பெரியது என்றும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் கூறியுள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் நாக்பூரில் தொடங்குகிறது.

இந்த முறை நடைபெறுவது கடைசி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடராகும். எனவே யார் வரலாற்று வெற்றியுடன் முடிக்கப்போகிறார்கள் என கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர்.

ஆஸி, டெஸ்ட் தொடர்

ஆஸி, டெஸ்ட் தொடர்

இரு அணிகளும் மோதிய கடைசி 3 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி மட்டுமே தொடர்ச்சியாக வெற்றி கண்டுள்ளது. 2012ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இந்திய அணி தோற்றதில்லை. மறுபுறம் ஆஸ்திரேலிய அணியோ 2004ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவை சொந்த மண்ணில் ஒருமுறை கூட வீழ்த்தியது கிடையாது. எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என இந்த முறை களமிறங்குகின்றனர்.

ஸ்மித்-ன் கருத்து

ஸ்மித்-ன் கருத்து

இந்நிலையில் இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பேசியுள்ளனர். அதில், இந்திய களங்களில் டெஸ்ட் போட்டியை வெல்வது மிக மிக கடினம். எங்களால் ஒரு மலையை சாய்க்க முடியுமா? என்ற சவால் தான் இந்தியாவை வீழ்த்துவது. ஒருவேளை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுவிட்டால் அது எங்களுக்கு ஆஷஸை வெல்வதை விட பெரியதாக இருக்கும்.

வார்னரின் நோக்கம்

வார்னரின் நோக்கம்

இதே போன்ற கருத்தை வார்னரும் கூறியுள்ளார். இந்திய தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். எப்போதுமே அது கடினமாக தான் இருந்துள்ளது. இந்த முறை ஒரே ஒரு நோக்கம் மட்டுமே எனக்கு உள்ளது. உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களுக்கு எதிராக எனது திறமையை காட்டப்போகிறேன். ஆஷஸ் தொடரில் விளையாடியது சிறப்பாக இருந்தது. ஆனால் இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினமான சவால் ஆகும்.

ஸ்மித் ரெக்கார்ட்

ஸ்மித் ரெக்கார்ட்

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்டர்கள் ஆகும். இந்திய மண்ணில் இதுவரை 12 இன்னிங்ஸில் ஆடியுள்ள ஸ்மித் 3 சதங்களுடன் 660 ரன்களை அடித்துள்ளார். அவரின் சராசரி 60 ரன்கள் ஆகும். மறுபுறம் டேவிட் வார்னர் 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 338 ரன்களை அடித்துள்ளார். அவரின் சராசரி 24.25 ரன்கள் ஆகும்.

Story first published: Monday, February 6, 2023, 21:02 [IST]
Other articles published on Feb 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+