Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கப் பெண்.. உலகிலேயே எந்த வீராங்கனையும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த ஸ்மிருதி மந்தனா!

பெர்த்: கிரிக்கெட் வரலாற்றிலேயே மகளிர் ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் நான்கு சதங்களை அடித்த முதல் வீராங்கனை என்ற பிரம்மாண்ட சாதனையை படைத்து இருக்கிறார் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா. அவர் இந்த ஆண்டு மகளிர் ஒருநாள் போட்டிகளில் இதுவரை நான்கு சதங்களை அடித்து இருக்கிறார்.

நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 14 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் உட்பட 109 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஹர்லின் தியோலுடன் இணைந்து 118 ரன்கள் சேர்த்தார். ஹர்லீன் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார்.

ind-vs-aus-smriti-mandhana-four-centuries-in-womens-odis-2024


ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 298 ரன்கள் எடுத்த நிலையில், அதை சேஸிங் செய்தபோது ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடி இருந்தார். ஆனாலும், இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தது. ஸ்மிருதி மந்தனா சதம் வீணாகப் போனது. இந்த போட்டியில் மந்தனா மற்றும் ஹர்லீன் தவிர வேறு எந்த இந்திய வீராங்கனையும் 20 ரன்களை தாண்டவில்லை.

இந்தப் போட்டியில் இந்த ஆண்டின் நான்காவது சதத்தை அடித்த ஸ்மிருதி மந்தனா அதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். இதுவரை 91 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள ஸ்மிருதி மந்தனா அதில் மொத்தம் 9 சதங்களை அடித்து இருக்கிறார். அதில் நான்கு சதங்கள் 2024 ஆம் ஆண்டில் மட்டுமே அடிக்கப்பட்டது என்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு அவர் 10 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 599 ரன்கள் எடுத்து இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் மாதன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்தார். அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக அக்டோபர் மாதம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்து இருக்கிறார். இதுவரை மகளிர் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிகபட்சமாக மூன்று சதங்கள் மட்டுமே அடிக்கப்பட்டு உள்ளன. அந்த சாதனையை ஆறு வீராங்கனைகள் செய்து உள்ளனர். அவர்கள் ஆறு பேரின் சாதனையையும் ஸ்மிருதி மந்தனா முறியடித்து உலக சாதனை படைத்து இருக்கிறார். இதன் மூலம் உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார் ஸ்மிருதி மந்தனா.

ஒரே ஆண்டில் மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீராங்கனைகள் பட்டியல் -

4 சதம் - ஸ்மிருதி மந்தனா - (2024, இந்தியா)

3 சதம் - பெலிண்டா கிளார்க் - (1997, ஆஸ்திரேலியா)

3 சதம் - சோஃபி டிவைன் (2018, நியூசிலாந்து)

3 சதம் - ஏமி சாட்டர்த்வைட் (2016, நியூசிலாந்து)

3 சதம் - மெக் லானிங் (2016, ஆஸ்திரேலியா)

3 சதம் - லாரா வால்வார்ட் (2024 , தென்னாப்பிரிக்கா)

3 சதம் - சிட்ரா அமின் (2022, பாகிஸ்தான்)

Story first published: Thursday, December 12, 2024, 12:05 [IST]
Other articles published on Dec 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+