Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 செஞ்சுரி.. தெறிக்க விட்ட பின்ச், ஸ்டீவ் ஸ்மித்.. இந்திய அணியின் மெகா சொதப்பல்!

சிட்னி : முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 374 ரன்கள் குவித்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து 6 விக்கெட்கள் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் இந்தியா ஆடும் முதல் சர்வதேச போட்டி என்பதால் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தியா சொதப்பல்

இந்தியா சொதப்பல்

இந்திய அணி இந்தப் போட்டியில் துவக்கம் முதலே பந்துவீச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய அதே இந்திய பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் திணறினர். பும்ரா, ஷமியால் பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

வார்னர் அரைசதம்

வார்னர் அரைசதம்

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் துவக்கத்தில் நிதான ஆட்டம் ஆடி விக்கெட்டை தர்காத்தனர். அதன் பின் அவர்கள் அதிரடி ஆட்டம் ஆடினர். வார்னர் 76 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் வந்தார்.

பின்ச் சதம்

பின்ச் சதம்

ஆரோன் பின்ச் நிதான ஆட்டம் ஆடி பின் வேகம் எடுத்தார். அவர் தன் 17வது ஒருநாள் போட்டி சதம் கடந்து, 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து அதிரடி ஆட்டம் ஆட அனுப்பப்பட்ட ஸ்டோய்னிஸ் முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

ஸ்டீவ் ஸ்மித் அதிரடி

ஸ்டீவ் ஸ்மித் அதிரடி

மறுபுறம் நிதான ஆட்டம் ஆடும் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியில் கலக்கினார். 36 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 62 பந்துகளில் சதம் கடந்து மிரள வைத்தார். 11 ஃபோர், 4 சிக்ஸ் அடித்த அவர் 66 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மேக்ஸ்வெல் மிரட்டல்

மேக்ஸ்வெல் மிரட்டல்

கிளென் மேக்ஸ்வெல் இந்தப் போட்டியில் உச்சகட்ட அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். 5 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார் அவர். லாபுஷாக்னே 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

எகிறிய ஸ்கோர்

எகிறிய ஸ்கோர்

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் கேரி 17, கம்மின்ஸ் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணிக்கு 375 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது ஆஸ்திரேலியா.

அடி வாங்கிய இந்தியா

அடி வாங்கிய இந்தியா

இந்திய அணி இந்தப் போட்டியில் மோசமாக அடி வாங்கியது. கேப்டன் விராட் கோலி சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே தேர்வு செய்து கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாமல் சிரமப்பட்டார். அதனால், ஆஸ்திரேலியா திட்டமிட்டு ஆடி ரன் குவித்தது.

சாஹல், பும்ரா பந்துவீச்சு

சாஹல், பும்ரா பந்துவீச்சு

முன்னணி பந்துவீச்சாளர்களான சாஹல் 10 ஓவர்களில் 89 ரன்களும், பும்ரா 73 ரன்களும் கொடுத்து அதிர்ச்சி அளித்தனர். நவ்தீப் சைனி 83 ரன்கள் கொடுத்தார். இவர்கள் மூவரும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஷமி 59 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

Story first published: Friday, November 27, 2020, 14:06 [IST]
Other articles published on Nov 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+