Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1 ரன்னில் மிஸ் ஆன சாதனை..10 ஆயிரம் ரன்களை மீண்டும் எட்ட முடியாமல் ஸ்மித் ஆட்டமிழப்பு..பிரசித் அபாரம்

சிட்னி : இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் நான்கு ரன்னில் ஆட்டம் இழந்து மிகப்பெரிய ஒரு மைல் கல்லை எட்ட முடியாமல் பெவிலியன் சென்றார்.

5 போட்டி கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

ind vs aus steve smith prasidh krishna virat kohli

இந்த சூழலில் கடைசி இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இந்திய அணி 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணி முதல் மூன்று ஓவரில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து, இந்திய அணி வாரி வழங்கியது. இதை அடுத்து பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார்.

கோன்ஸ்டாஸ் 22 ரன்களிலும், லாபஸ்சேன் 6 ரன்களிலும் வெளியேறினார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீர ஸ்மித் களத்திற்கு வந்தார். ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9995 ரன்கள் அடித்து இருந்தார். இதனால் வெறும் ஐந்து ரன்கள் சேர்த்திருந்தால் கூட ஸ்மித் பத்தாயிரம் ரன்களை எட்டி இருப்பார்.

முதல் இன்னிங்ஸ் 10 ஆயிரம் ரன்கள் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரசித் கிருஷ்ணா ஓவரில் ஆட்டம் இழந்தார். இதனால் மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறுமா என ரசிகர்கள் காத்திருந்தனர். இன்று சிட்னி டெஸ்ட் போட்டியில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் ஸ்மித்தின் சாதனையை பார்க்க வந்தனர்.

ஆனால் ஸ்மித் 9999 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனால் ஸ்மித் மீண்டும் தனது பத்தாயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை ஒரு ரன்னில் மிஸ் செய்து பெவிலியன் திரும்பினார். ஸ்மித் 4 ரன்னில் ஆட்டம் இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. இதனால் வெற்றிக்கான கதவு லேசாக இந்தியாவுக்கு திறந்திருந்தாலும், ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 5, 2025, 7:17 [IST]
Other articles published on Jan 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+