Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு ரன் கூட எடுக்க முடியலை.. வரிசையா 3 ஓவர்.. வார்னர், ஸ்மித்துக்கே தண்ணி காட்டிய இந்திய ஜோடி

மொஹாலி : இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆடியது.

இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

IND vs AUS : Steve Smith, warner cant able to score runs in 3 overs of Bumrah, Shami

ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் துவக்கம் அளிக்க வந்தனர். முதல் ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்திலேயே மார்ஷ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர்களான டேவிட் வார்னர் - ஸ்டீவ் ஸ்மித் ஒரே நேரத்தில் களத்தில் இருந்த நிலையில், ஷமி மற்றும் பும்ரா அடுத்தடுத்த ஓவர்களை வீசினர். ஆனால், ஸ்டீவ் ஸ்மித், வார்னர் அடுத்த மூன்று ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். ஸ்மித் சந்தித்த அந்த ஓவரில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அடுத்து ஷமி மூன்றாவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்து ஸ்டம்புக்கு மிக அருகே சென்றது. விக்கெட் கீப்பர் ராகுல் அந்த பந்தை பிடிக்காததால் பந்து பவுண்டரியை அடைந்தது. வார்னர் அந்த பந்தை தொடாத நிலையில், பைஸ் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு நான்கு ரன்கள் கிடைத்தது.

அடுத்து ஐந்தாவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரிலும் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. இப்படி தொடர்ந்து மூன்று ஓவர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ரன் எடுக்க முடியாதபடி பந்து வீசியது பும்ரா - ஷமி ஜோடி.

நான்கு ஓவர் முடிவில் ஸ்டீவ் ஸ்மித் 13 பந்துகளில் 1 ரன்னும், வார்னர் 7 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அப்போது 9 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து ஷமி - பும்ரா இருவரும் சேர்ந்து பந்து வீசிய நிலையில், சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர்கள் இணைந்து பந்து வீசினால் என்ன நடக்கும் என்பதை கண் முன்னே காட்டினர்.

Story first published: Friday, September 22, 2023, 14:43 [IST]
Other articles published on Sep 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+