Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த வருடம் முழுக்க இவர்தான் ஓப்பனிங்.. வலுவான முத்திரை பதித்த இளம் வீரர். குறி வைக்கும் பிசிசிஐ!

சிட்னி: இந்திய அணியின் இளம் வீரர் சுப்மான் கில்தான் அடுத்த வருடம் முழுக்க டெஸ்ட் அணியில் ஓப்பனிங் இறங்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. சுப்மான் கில், ரோஹித் சர்மா இரண்டு பேரும் அடுத்த வருடம் முழுக்க இந்திய டெஸ்ட் அணியில் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மான் கில் நம்பிக்கை அளிக்க தொடங்கி உள்ளார். பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய இவர் முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் இன்று நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் அறிமுகம் ஆனார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சுப்மான் கில் களமிறங்கினார்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இன்னொரு ஓப்பனிங் வீரர் மயங்க் அகர்வால் டக் அவுட் ஆன நிலையில் சுப்மான் கில் மீது அதிக அழுத்தம் இருந்தது. ஆனால் சுப்மான் கில் மிகவும் நேர்த்தியாக ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துகளை எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய பவுலர்கள் இன்று கடைசி கட்டத்தில் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் சுப்மான் கில் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மிகவும் நேர்த்தியாக ஆடினார். முக்கியமாக இன்று சுப்மான் கில் ஷாட்களை தேர்வு செய்த விதம். ஷார்ட் பந்துகளை அடித்த விதம் கவனம் ஈர்த்தது. தான் ஒரு நல்ல டெஸ்ட் ஓப்பனர் என்பதை சுப்மான் கில் நிரூபித்துள்ளார்.

எத்தனை

எத்தனை

இதுவரை சுப்மான் கில் 28 ரன்கள்தான் இன்றைய ஆட்டத்தில் அடித்துள்ளார். ஆனால் இது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், கடினமான பவுலிங்கை எதிர்கொண்டு வந்த ரன்கள். இந்த நிலையில் அடுத்த வருடமும் இவர்தான் ஓப்பனிங் இறங்க வேண்டும். இந்திய டெஸ்ட் அணியில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை

கோரிக்கை

சுப்மான் கில் இந்திய அணியின் எதிர்காலம். இவருக்கு அடுத்த வருடம் நடக்கும் இங்கிலாந்து, இலங்கை போன்ற தொடர்களில் எல்லாம் முழு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பிசிசிஐ அமைப்பும் இதை ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இவர் ஆடுவார்.

மயங்க்

மயங்க்

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறுவார். இதனால் சுப்மான் கில், ரோஹித் சர்மா இரண்டு பேரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியில் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மயங்க் அகர்வால் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, December 26, 2020, 17:13 [IST]
Other articles published on Dec 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+