மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் அபாரமாக பேட்டிங் செய்து அணியை காப்பாற்றினார். ஆனால் இம்முறை ரிஷப் பண்ட் பெரும் தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை. இதனால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மெல்போர்ன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. பந்து பேட்டிற்கு வேகமாக செல்லும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிஷப் பன்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் அவருக்கு அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் மற்ற பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய வேண்டுமோ அதையே தான் பண்டும் செய்ய வேண்டும். ஆஸ்திரேலிய போன்ற ஆடுகளத்தில் விளையாடும் போது முதல் ஒரு மணி நேரம் களத்திற்கு மரியாதை கொடுங்கள். பேட்டிங் செய்ய சென்றவுடன் அனைத்து பந்தையும் அடிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.
முதலில் ஆடுகாலத்திற்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து விட்டு அதன் பிறகு நீங்கள் உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
ஒருவேலை இந்திய அணி 525 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில் ரிஷப் பண்ட், பேட்டிங் செய்ய வந்தால் அப்போது அவர் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். பண்ட்க்கு எதிராக கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் பந்தை ஒரு கோணத்தில் வீசுகிறார்கள்.
இதே போல் தான் போலாந்தும் வீசினார். எனவே இது நிச்சயம் ரிஷப் பண்டிற்கு பிரச்சனையை வழங்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மூன்று டெஸ்ட் தற்போது முடிவடைந்து நிலையில் 5 இன்னிங்சில் பண்ட் மொத்தமாகவே 96 ரன்கள் தான் சேர்த்திருக்கிறார்.
இதில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்றால் 37 தான். ரிஷப் பண்டின் சராசரி 19.20 என்ற அளவில் இருக்கிறது. இதில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பண்ட் மட்டுமல்லாமல் இந்திய அணியின் மற்ற வீரர்களும் கவாஸ்கர் சொன்ன இந்த அட்வைஸை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.