Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கு நீங்க செய்தது சரியில்ல! கேப்டன் பொறுப்பும் தரல? பேட்ஸ்மேனுக்கு தனி ரூல்ஸா?கவாஸ்கர் சாடல்

மும்பை : உலகின் முன்னணி பந்துவீச்சாளரான அஸ்வின் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து விலகி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அணியில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் தான் அஸ்வின் இந்த முடிவை எடுத்ததாக பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது பல போட்டிகளில் தொடர் நாயகன் விருதை அஸ்வின் வாங்கி இருக்கிறார்.

ravichandran ashwin ind vs aus ashwin retirement


அஸ்வினை வெளிநாடுகளில் தொடர்ந்து அணியை விட்டு நீக்கி வைத்தார்கள். கேட்டால் அணியின் பேலன்ஸ் மிஸ் ஆவதாக காரணம் கூறினார்கள். சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை உங்களால் நீக்க முடியாது என்று கண்டிப்பாக தெரியும்.

ஏனென்றால் அஸ்வின் இல்லாமல் சொந்த மண்ணில் நீங்கள் போட்டியில் வெற்றி பெற முடியாது. ஆடுகளம் காரணமாக தான் நாங்கள் உலகின் முதல் நிலை வீரரான அஸ்வினை நீக்குகிறோம் என்று கூறும் அணி நிர்வாகம் அதுவே ஏன் பேட்ஸ்மேன்களை நீக்குவது கிடையாது. அதுவும் பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் முதலிடத்தில் கூட இல்லாத வீரர்களை ஏன் இவர் இந்த பிச்சுக்கு சரி வர மாட்டார் என்று கூறி நீக்குவது கிடையாது.

அஸ்வின் இந்திய அணியின் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயம் சிறப்பான ஒரு கேப்டனாக பணியாற்றி இருப்பார். ஆனால் அணியின் துணை கேப்டனாக கூட அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. பெரிய முக்கியத்துவம் இல்லாத தொடரில் அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கி கௌரவப்படுத்தி இருக்கலாம்.

இல்லை இருதரப்பு ஒரு நாள் தொடரில் அஸ்வினுக்கு அந்த கௌரவத்தை வழங்கி இருக்கலாம். ஆனால் அனைத்தும் அஸ்வினுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அஸ்வின் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அஸ்வினை முன்னிறுத்தி ரோகித் சர்மா செய்த காரியம் பாராட்டத்தக்கது. இதனால் தான் ரோகித் சர்மாவை பலரும் விரும்புகிறார்கள் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Monday, December 23, 2024, 17:33 [IST]
Other articles published on Dec 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+