Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஆஸ்திரேலியா அணியில் பிளவுன்னு சொன்னேனா.. சுனில் கவாஸ்கர் கொடுத்த விளக்கம்.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பேசியது தொடர்பாக இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்ச், ரியான் ஹாரிஸ் உள்ளிட்டோர் கவாஸ்கரின் பேச்சிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளை வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் விமர்சித்திருந்தார். இதன்பின் 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் தேர்வு செய்யப்பட்டார்.

ind vs aus border gavaskar trophy sunil gavaskar

இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்களை விமர்சித்ததாலேயே ஹேசல்வுட் நீக்கப்பட்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த கருத்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் மத்தியில் ரசிக்கப்படவில்லை. முன்னாள் வீரர்களான ஆரோன் ஃபின்ச், ரியான் ஹாரிஸ் உள்ளிட்டோர் கவாஸ்கரை கடுமையாக விமர்சித்தனர்.

ரியான் ஹாரிஸ் பேசுகையில், கவாஸ்கரின் கருத்தை குப்பையில் தான் போட வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியா அணிக்குள் ஒரு நாளும் அரசியலுக்கு இடம் கிடையாது. இந்திய அணியில் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முன்பாக பலமுறை இந்திய அணியில் அப்படியான விஷயங்கள் நடப்பதை கண்டுள்ளேன். ஹேசல்வுட்டின் பேச்சிற்காக அவர் நீக்கப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா ஓய்வறையில் வீரர்களுக்கு இடையில் எந்த மோதலும் இல்லை என்று கேப்டன் கம்மின்ஸ் உறுதி செய்தார். இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியா அணியின் ஓய்வறை குறித்து நான் எதுவும் பேசவில்லை. ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லை என்று அந்த அணியின் முன்னாள் வீரர்கள் தான் கருத்து தெரிவித்து வந்தனர்.

அவர்களின் கருத்துக்கு பின் தான் ஹேசல்வுட் நீக்கம் குறித்து பேசினேன். ஏனென்றால் பெர்த் டெஸ்டில் ஹேசல்வுட் பேட்டிங் செய்த போது, அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இருந்தாலும் 2வது டெஸ்டில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தார். இதில் மர்மம் இருப்பதாக மட்டுமே தொடர்ந்து பேசினேன். ஏனென்றால் இந்திய அணியின் ஆட்டத்தை அவ்வளவு ரசித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் மட்டுமல்லாமல் ஹேசல்வுட்டின் பேச்சிற்கு பின்னர், ஆஸ்திரேலியா முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட், இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கில் வாஹன் உள்ளிட்டோரும் இதே கருத்தை கூறியிருந்தனர். அதேபோல் ஆஸ்திரேலியா மீடியாக்களும் இந்த கருத்தை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 6, 2024, 20:13 [IST]
Other articles published on Dec 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+