Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ரிங்கு சிங் என்ன பாவம் செய்தார்? எப்போது தான் வாய்ப்பு தருவீங்க? ரெய்னா கேள்வி

மும்பை: இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டியில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு தரப்படுவது கடினம் தான் என்று சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, நான்காவது டி20 போட்டிகள் வெற்றி பெற்ற பிறகு நாம் ஐந்தாவது போட்டியில் வெல்ல தான் முயற்சி செய்வார்கள்.

Suresh raina

இதனால் அணியில் எந்தவித மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காது. எனக்கு தெரிந்து 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு டி20 தொடரில் ஆஸ்திரேலியாவில் நாம் இழக்கவில்லை. எனவே அந்த நம்பிக்கை அடுத்தடுத்த போட்டிகளிலும் நமக்கு இருக்கும்.

தொடரை வெல்வதுதான் அனைத்து விட மிகவும் முக்கியம். கண்டிப்பாக ரிங்கு சிங் தேர்வு குழுவினரின் கவனத்தில் இருப்பார் என நினைக்கின்றேன். ஜித்தேஷ் சர்மாவும் மூன்றாவது டி20 போட்டியில் நன்றாக விளையாடினார். வாஷிங்டன் சுந்தரும் தொடர்ந்து இரண்டு போட்டிகளாக பேட்டிகள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

ஐந்தாவது டி20 போட்டியில் எந்த வீரருக்கும் காயம் இல்லை என்றால் அணியில் எந்தவித மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை யாருக்காவது காயம் ஏற்பட்டு இருந்தால் வாய்ப்பு கிடைக்கும். இதனால் ரிங்கு சிங் தான் பாவம். அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல், ரிங்கு சிங் கண்டிப்பாக டி20 உலக கோப்பையில் விளையாடுவார் என்றும் ஆனால் அனைத்து வீரர்களுக்கும் தற்போது வாய்ப்பு தரப்படுவது என்பது அணி நிர்வாகத்தின் மனதில் இருக்காது. ஆனால் அடுத்தடுத்த தொடரில் வாய்ப்பு தரப்படலாம். அதுவரை கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்.

வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என பார்த்திவ் பட்டேல் கூறியுள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 25 டி20 இன்னிங்ஸில் விளையாடிய ரிங்கு சிங் 550 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்டரைக் ரேட் 161 என்ற அளவில் இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டு அவர் வெறும் நான்கு டி20 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். அதில் அவர் அடித்த ரன்கள் 43 ஆகும்.

Story first published: Friday, November 7, 2025, 12:22 [IST]
Other articles published on Nov 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+