Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- 15 வீரர்களையும் அணியில் தேர்வு செய்ய முடியாது.. என் பேட்டிங் குறித்து கவலை இல்லை.. சூர்யகுமார்

கான்பெரா: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் புதன்கிழமை கான்பெரா நகரில் தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் நடப்பாண்டில் டி20 கிரிக்கெட்டில் வெறும் 11 என்ற அளவில் சராசரியை வைத்திருக்கின்றார். கடந்த 14 போட்டிகளாக அவர் ஒரு முறை கூட அரை சதம் அடிக்கவில்லை.

ஒரு காலத்தில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக இருந்த சூரிய குமார் யாதவ் தற்போது தடுமாறி வருவது இந்திய அணிக்கு ஒரு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நான் என்னுடைய பேட்டிங் குறித்து கடுமையாக உழைத்து வருகின்றேன்.

Suryakumar yadav

இதற்கு முன்பும் நான் அப்படிதான் பேட்டிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றேன். நான் வலை பயிற்சி சரியாக செய்வது கிடையாது.என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்தியாவில் இருக்கும்போதே இரண்டு மூன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். எனவே நான் நல்ல மனநிலையிலும், உடல் நிலையிலும் இருக்கின்றேன். அதுதான் மிகவும் முக்கியம்.

அது இருந்தால் நிச்சயம் ரன்கள் தானாக வந்துவிடும். ஆனால் என்னுடைய பேட்டிங்கை விட அணியின் குறிக்கோள் தான் முக்கியம். அணியில் வெற்றி தான் முக்கியம். அதை நோக்கி தான் நாங்கள் சொல்கின்றோம். எங்கள் அணியின் காம்பினேஷங்கள் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று நினைக்கின்றேன்.

தென்னாப்பிரிக்காவில் நாங்கள் விளையாடும் போதும் ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு ஆல் ரவுண்டர், மூன்று சுழற் பந்துவீச்சாளர் என்ற காம்பினேஷன் தான் விளையாடினோம். அதேபோல் ஒரு கள சூழல் தான் இங்கும் இருக்கும். ஆனால் இங்கு பந்தின் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.ஒரு கேப்டனாக அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களிடமும் நான் நல்ல நட்புறவில் இருக்கின்றேன்.

இதனால் அணியில் தேர்வு செய்ய முடியாத வீரர்களிடம் காரணத்தை நான் விளக்கிக் கூறி விடுவேன். அணியில் 11 வீரர்கள் தான் விளையாட முடியும். இதன் காரணமாக அணியில் இருக்கும் 15 வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியாது. என்னைக் கேட்டால் நிச்சயம். ஏதேனும் ஒரு கட்டத்தில் அணியில் உள்ள யாருக்கும் எந்த வாய்ப்பு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆசியக் கோப்பையை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் ரிங்கு சிங் அந்த தொடர் முழுவதும் விளையாடவில்லை. ஆனால் இறுதிப் போட்டியில் கடைசி மூன்று நான்கு ரன்கள் இருக்கும்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்று சூரிய குமாரியாதவ் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, October 28, 2025, 12:06 [IST]
Other articles published on Oct 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+