Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவைக் கண்டாலே முதல் பந்தில் டக் அவுட் ஆகும் இந்திய வீரர்.. இதில் ஹாட்ரிக் ரெக்கார்டு வேற!

மொஹாலி : இப்படி ஒரு மோசமான சாதனையை வேறு எந்த வீரரும் செய்திருக்க முடியாது. இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் அப்படி ஒரு சாதனையை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக செய்து இருக்கிறார்.

ஒரே ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியிடம், தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அந்த சாதனையை தன் வசம் வைத்து இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

IND vs AUS : Suryakumar Yadav and his hatrick golden duck against Australia

இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ள நிலையில், இந்த சம்பவம் பலருக்கும் நினைவுக்கு வந்துள்ளது.

சுமார் 6 மாதங்கள் முன்பு தான் இந்த அரிய சாதனையை சூர்யகுமார் யாதவ் செய்து இருந்தார். தற்போது மீண்டும் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. அதில் நிச்சயம் சூர்யகுமார் யாதவ் போட்டிகளில் களமிறங்க உள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் முதல் இரண்டு முறை மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து இருந்தார். மூன்றாவது போட்டியில் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் பவுல்டு அவுட் ஆகி இருந்தார்.

மூன்று முறையும் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தது அப்போது பெரும் கேலிப்பொருளாக மாறியது. சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் இருந்தே, அனைத்து பந்துகளையும் அடித்து ஆட முயற்சி செய்வதுதான் இப்படி வரிசையாக மூன்று முறை கோல்டன் டக் அவுட் ஆகக் காரணம்.

தற்போது அதே ஆஸ்திரேலிய அணி, அதே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மீண்டும் நடைபெற உள்ளதால் சூர்யகுமார் யாதவ் இந்த முறையாவது டக் அவுட் ஆகாமல் தப்பிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இத்தனைக்கும் அணியில் அவரின் நிலைமை மோசமாக உள்ளது. இந்த தொடரில் அவர் ரன் குவித்தால் மட்டுமே உலகக்கோப்பை தொடரில் அவருக்கு ஆடும் வாய்ப்பு கிடைக்கும்.

Story first published: Friday, September 22, 2023, 7:00 [IST]
Other articles published on Sep 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+