Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: பவர்பிளேவில் 4 விக்கெட் இழந்தால், வெற்றி எப்படி கிடைக்கும்.. சூர்யகுமார் சாடல்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 125 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

Suryakumar yadav

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் , பவர் பிளேவில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவர் பிளேக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தால், அதிலிருந்து மீண்டு வருவது என்பது மிகவும் கடினமான காரியம். இதற்காக ஆஸ்திரேலியாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறிப்பாக ஹேசல்வுட் அபாரமாக பந்து வீசி எங்களுக்கு நெருக்கடியில் ஏற்படுத்தினார். அபிஷேக் ஷர்மா கடந்த சில காலமாக இப்படித்தான் எங்களுக்கு விளையாடி வருகிறார். அவருடைய ஆட்டம் அவருக்கு நன்றாக தெரிகிறது. இதுதான் அவருடைய அடையாளமாக இருக்கின்றது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்த அதிரடி ஆட்டத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

இப்படி ஆக்ரோஷமாக விளையாடுவது தான் அவருக்கு வெற்றியைத் தேடித் தருகிறது. இதே போல் ஒரு ஆட்டத்தை தொடர்ந்து அவர் விளையாடி எங்களுக்கு பல போட்டிகளில் நல்ல தொடக்கத்தை பெற்றுத் தருவார் என்று நம்புகிறேன். முதல் போட்டியில் நாங்கள் என்ன செய்தோமோ அதையே இரண்டாவது போட்டியிலும் செய்திருக்க வேண்டும்.

ஒருவேலை நாங்கள் பேட்டிங் செய்ய நேரிட்டால் பெரிய ஸ்கோரை நிர்ணயித்து அதன் பின் அந்த ஸ்கோரை தற்காத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Story first published: Friday, October 31, 2025, 18:31 [IST]
Other articles published on Oct 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+