IND vs AUS: சூர்யகுமார் இந்த விசயத்தை மாற்றவே கூடாது.. புள்ளி விவரத்துடன் பேசிய ராபின் உத்தப்பா
கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 9.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. இதில் கேப்டன் சூரியகுமார் யாதவ் மூன்றாவது வீரராக களமிறங்கி 24 பந்துகளில் 39 ரன்கள் குவித்திருந்தார். இந்த போட்டி மழை காரணமாக நடத்தப்பட முடியவில்லை என்பதால் கைவிடப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, சூரியகுமார் யாதவ் மூன்றாவது வீரராக தான் தொடர்ந்து களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், சூரியகுமார் யாதவ் நிலைமை இரண்டு பாறைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட விஷயம் போல் ஆகிவிட்டது.

அவர் தன்னுடைய பேட்டிங் செயல்பாடு பார்க்க வேண்டும். அதே சமயம் கேப்டன் ஆகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். என்னை கேட்டால் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது வீரராக தான் களமிறங்க வேண்டும். இதுதான் அவருக்கு சிறந்த ஒரு இடம் என நினைக்கின்றேன்.
முதல் மூன்று வீரர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியாக விளையாட வேண்டும். அதன் பிறகு வேண்டுமானால் நீங்கள் சூழலுக்கு ஏற்ப பேட்டிங் வரிசையை மாற்றிக் கொள்ளுங்கள். ஆசியக் கோப்பையில் கூட தொடக்க வீரர்களின் இடது கை பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்தால் சூரிய குமாரும் வலது கை பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்தால் திலக் வருமாவும் மூன்றாவது வீரராக களம் இறங்குவார்கள்.
அது கூட ஒரு அளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நான்காவது இடத்திற்கு கீழ் சூரியகுமார் யாதவ் களமிறங்க கூடாது. ஏனென்றால் ஒரு வேளை கீழ் வரிசையில் களமிறங்கினால் அவர் பல மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கும். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு சூரியகுமார் பேட்டிங் ஃபார்ம் மிகவும் முக்கியமாகும்.
சூரியகுமார் யாதவ் உலகக் கோப்பையில் வெல்ல வேண்டும் என்றால், அவர் களத்தில் பேட்டராக அதிக நேரம் செலவிட வேண்டும். ஏனென்றால் தற்போது அவர் ஒரே ஒரு வித கிரிக்கெட்டில் தான் விளையாடி வருகிறார். நீங்கள் அணியின் மிகவும் முக்கியமான வீரராக இருப்பதால் உங்களுடைய பார்மும் அணிக்கு மிகவும் முக்கியம். நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்கி இன்று அதிரடி காட்டி அசத்தினார்.
பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் அகலமாக பந்து வீசினால் அவர் அந்த பவுலரை அல்வா போல் சாப்பிட்டு விடுவார். சூரியகுமார் போன்ற திறமையான வீரர்கள் கண்சிமிக்கும் நேரத்தில் பார்முக்கு திரும்பி விடுவார்கள் என ராபின் உத்தப்பா கூறியுள்ளார். சூரியகுமார் யாதவ், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நம்பர் நான்காவது பேட்டிங் வரிசைக்கு கீழ் ஆறு முறை களமிறங்கி மொத்தமாக 140 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 155 ஆகும். சூரியகுமார் யாதவும் நம்பர் மூன்றாவது வீரராக 29 முறை களமிறங்கி 820 ரன்கள் அடித்திருக்கிறார். அதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 159 ஆகும். நான்காவது வீரராக 47 போட்டிகளில் களமிறங்கி 1214 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 167 ஆகும்.


Click it and Unblock the Notifications