செங்கல் சூளையில் கல்லு தூக்குன கை.. ரிங்கு சிங் பேட் ஸ்பீடை பார்த்து கதிகலங்கிய ஆஸ்திரேலியா
விசாகப்பட்டினம் : முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து கதிகலங்க வைத்த ரிங்கு சிங் சிறு வயதில் செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறார்.
செங்கல் சூளையில் கடும் எடையை கைகளால் சுமந்த ரிங்கு சிங்கிற்கு அதுவே தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்கவும் காரணமாக மாறி இருக்கிறது.
இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் ரிங்கு சிங்கின் பேட் ஸ்பீடு மிக அதிகமாக இருப்பது தான் அவர் எளிதாக சிக்ஸ் அடிக்க காரணம் என கூறப்படுகிறது. 2023 ஐபிஎல் தொடரில் அவர் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற வைத்தது முதலே அவரது கிரிக்கெட் வாழ்க்கை தலைகீழாக மாறியது.

இந்திய அணியில் இருந்து வாய்ப்பு தேடி வந்து அவர் வீட்டுக் கதவை தட்டியது. அவர் எந்த சூழ்நிலையிலும் அசாதாரணமாக சிக்ஸ் மற்றும் ஃபோர் அடிப்பதால் தான் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு காரணம், அவர் பேட்டை சுழற்றும் வேகம். அவரது பேட் ஸ்பீடு மிக அதிகமாக இருப்பதால் பந்தை அவர் அடிக்கும் போது அது அதிக வேகத்தில் பறக்கிறது. அதுவே அவர் அதிக பவுண்டரி அடிக்கும் ரகசியம்.
ரிங்கு சிங்கின் குடும்பம் மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருந்ததால், சிறு வயதிலேயே செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறார் அவர். அதிக எடை கொண்ட பொருளான செங்கற்களை அவர் கையாண்டதால் அவருக்கு இயல்பாகவே கையில் பலம் அதிகமாக இருக்கிறது. அதனால், பேட்டை கையாள்வது அவருக்கு மற்ற வீரர்களை காட்டிலும் சற்று எளிமையான ஒன்றாக இருக்கிறது. அதனாலேயே அவரால் பேட்டை வேகமாக சுழற்றவும் முடிகிறது.
பின்னர் அவர் கிளப் கிரிக்கெட் போன்றவற்றில் சேர்ந்து முயன்று முன்னேறி இன்று நட்சத்திர கிரிக்கெட் வீரராக மாறி இருக்கும் நிலையிலும், தன் கை பலத்தை தொடர்ந்து தக்க வைக்க அவர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். ரிங்கு சிங் ஆணழகன் போட்டிக்கு செல்லும் அளவுக்கு தன் உடலை கட்டுக் கோப்பாக பராமரித்து வருவதை பல ரசிகர்கள் கடந்த காலங்களில் சுட்டிக் காட்டி இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ரிங்கு சிங் சிங்கிள் ரன் ஓட முயற்சி செய்வார் என ஆஸ்திரேலிய அணி எதிர்பார்த்தது. ஆனால், அவர் தன் கை பலத்தால் எளிதாக ஒரு சிக்ஸ் அடித்தார். அதை எதிர்பார்க்காத ஆஸ்திரேலியா தோல்வி அடைந்து கதி கலங்கிப் போனது.
ரிங்கு சிங் இந்தப் போட்டியில் 14 பந்துகளில் 22 ரன்கள் குவித்து இருந்தார். ஆஸ்திரேலியா கடைசி பந்தை நோ பாலாக வீசியதால் அவர் அடித்த சிக்ஸ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.


Click it and Unblock the Notifications