Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS - 6 பேரை வீட்டுக்கு அனுப்பும் ஆஸ்திரேலியா.. இந்தியா தொடரை வெல்வது உறுதி ஆயிடுச்சி!

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுடன் விளையாடி வருகிறது.

உலகக் கோப்பைத் தொடர் முடிந்த பிறகும் ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர்கள் இந்த தொடருக்காக இந்தியாவில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் முதல் இரண்டு டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Ind vs aus t20 series - 6 star player from australia goes home


மேலும் இரண்டாவது டி20 போட்டியில் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற ஸ்மித், மேக்ஸ்வெல் மற்றும் ஏடன் சம்பா போன்ற வீரர்கள் விளையாடினர். இந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு மேல் இந்தியாவில் தங்கி விளையாடி வருவதால் தாங்கள் மிகவும் சோர்வடைந்து இருப்பதாகவும் தங்களால் முழு திறனுடன் விளையாட வில்லை என்றும் அணி வீரர்கள் தங்களது இயலாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு உலகக்கோப்பை அணியில் இடம்பெற்று டி20 தொடரில் விளையாடி வந்த மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்மித், ஆடம்சம்பா, ஜோஸ் இங்கிலீஷ், சென் அப்பார்ட் போன்ற 6 வீரர்களை நாட்டிற்கு திரும்பி வர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருக்கிறது. அதேசமயம் பைனலில் பட்டையை கிளப்பிய டிராவிஸ் ஹெட் தான் இந்தியாவில் தங்கி தொடரை முடித்துக் கொண்டு வருவதாக கூறியிருக்கிறார்.

இதனால் அவர் தொடர்ந்து விளையாட உள்ளார். இவர்களுக்கு மாற்று வீரராக க்ரிஷ் கிரீன், ஜாஸ் ஃபிலிப்ஸ் பென் மெக்டர்மாட், பென் டுவார்சஸ் போன்ற வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்தியா மூன்று டி20 போட்டிகளில் இந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

மாற்றுவீராக களம் இறங்கிய வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். இதனால் வாய்ப்பு வழங்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்த நிலையில் இது இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகளை வெற்றி பெற்ற நிலையில் எஞ்சி இருக்கும் மூன்று போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வென்றால் இந்திய அணி தொடரை வென்று விடும்.
Story first published: Tuesday, November 28, 2023, 16:27 [IST]
Other articles published on Nov 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+