Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு பால் கூட பார்க்க முடியல.. ரசிகர்களை வெறுப்பேற்றிய Jio cinema ஆப்.. இப்படியா நம்பி ஏமாற்றுவது?

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் ரசிகர்கள் பலரும் இனி கிரிக்கெட் பக்கமே திரும்ப மாட்டோம் என்று கோபத்தில் சென்றார்கள்.

ஆனால் அடுத்த நான்கு நாட்களில் டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிவிட்டன. என்ன இருந்தாலும் நம்ம பசங்க ஆச்சே என்று மீண்டும் இந்திய ரசிகர்கள் பலரும் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை பார்க்க தொடங்கினர்.

Ind vs aus t20 series - Jio cinema app facing technical issues made fans angry

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த ஆட்டத்தை ஜியோ சினிமா தங்களுடைய ஆப்-ல் இலவசமாக ஒளிபரப்பு செய்வதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் தொடங்கினார்கள். முதல் டி20 போட்டியில் இந்திய வீரர்கள் ஒரு அளவுக்கு நன்றாகவே பந்து வீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் திடீரென்று ஜியோ சினிமா ஆப் வேலை செய்யவில்லை.

போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருந்த நிலையில் ஜியோ சினிமா ஆப் போட்டிகளை ஒளிபரப்பு செய்யாமல் அப்படியே நின்றது. இதனால் இணையதளத்தில் தான் ஏதோ பிரச்சனையோ என்று ரசிகர்கள் நினைக்க, கடைசியாக தான் தெரிந்தது இது ஜியோ சினிமா நிர்வாகம் செய்த வேலை. இதனை அடுத்து மீண்டும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஆப்பை பயன்படுத்த முயற்சி செய்தார்கள்.

ஆனால் இம்முறை உங்களுடைய ஆப்பை நீங்கள் அப்டேட் செய்யுங்கள் என்று காட்டியது. சரி நாம் ஆப்பை அப்டேட் செய்யவில்லை என்று கூகுள் பிளே ஸ்டோர் பக்கம் சென்றால் ஆப் ஏற்கனவே அப்டேட் ஆகி தான் இருக்கிறது என காட்டுகிறது. புதிய அப்டேட் எதுவும் இல்லை என தெரிகிறது. இதனால் ஜியோ சினிமாவை ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகிறார்கள்.

ஹாட்ஸ்டாரில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நடந்த நிலையில், ஜியோ சினிமா ஏன் இவ்வாறு செய்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இதனால் ட்விட்டரில் ஜியோ சினிமா என்ற ஹேஷ்டேக் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது .

Story first published: Thursday, November 23, 2023, 20:43 [IST]
Other articles published on Nov 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+