மும்பை : இந்திய கிரிக்கெட்டில் தற்போது இளம் புயலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் உருவெடுத்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையில் 154 பந்துகளில் இரட்டை சதம் அடித்து தன்னுடைய வருகையை அறிவித்த ஜெய்ஸ்வால் அண்டர் 19 உலக கோப்பையில் 400 ரன்கள் குவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு சீசனில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி 625 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அறிமுகமானார்.

தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 171 ரன்கள் விளாசி அசத்தினார். இதைப் போன்று தமக்கு கிடைத்த டி20 போட்டி வாய்ப்பிலும் அபாரமாக விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் எதிராக t20 போட்டியில் சதம் விளாசி டி 20 கிரிக்கெட்டில் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதுபோன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 25 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் பவர் பிளேவில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் குறித்து அவருடைய சிறு வயது பயிற்சியாளர் பெருமிதத்துடன் பேசி இருக்கிறார். அது ஜெய்ஸ்வால் அவரை மாதிரி மட்டும் கிடையாது. அவர் சேவாக்கின் மேம்பட்ட வடிவம் என்று கூறலாம். ஷேவாக் உண்மையிலேயே பெரிய வீரர் தான். அந்த காலத்தில் டி20 கிரிக்கெட் எல்லாம் அவ்வளவு கிடையாது.
ஆனால் இப்போது அப்படி கிடையாது நான். ஏன் ஜெய்ஸ்வாலை சேவாக்கின் மேம்பட்ட வடிவம் என்று கூறினேன் என்றால் சேவாக் போல் இவர் எல்லா ஷாட்டையும் விளையாடுவார். ஆனால் டெக்னிக் இவருக்கு நன்றாக தெரியும். சேவாக் கண்ணையும் கையும் ஒருங்கிணைத்து விளையாடுவார். ஆனால் ஜெய்ஸ்வால் தன்னுடைய காலையும் சிறப்பாக நகர்த்தி விளையாடுவார்.
ஷேவாக் சச்சினை பார்த்து விளையாட தொடங்கினார். அதேபோல் ஜெய்ஸ்வாலும் சச்சினை பார்த்து தான் விளையாடத் தொடங்கினார். ஜெய்ஸ்வால் ஒருவிரல் மட்டும் கிடையாது. அவருக்குள் பலவீரர்கள் உடைய திறமை இருக்கிறது. ஜெயஸ்வாலால் கங்குலி போல் ஆப் சைடில் சிறப்பாக விளையாட முடியும். இதைப்போல் ஷேவாக் மாதிரி அதிரடியாகவும் விளையாட முடியும்.
இதனை தான் நான் அடிக்கடி கூறுவேன். , சேவாக் மற்றும் கங்குலி கலந்த கலவை ஜெய்ஸ்வால் பயமின்றி விளையாடும் சேவாக்கின் மேம்பட்ட வடிவம் அவரைப் போலவே பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடுவார் ஜெய்ஸ்வாலுக்கு தன்னுடைய விக்கெட் போய்விடும் என்ற பயமே கிடையாது என்று அவருடைய பயிற்சியாளர் பாராட்டினார். (சேவாக்கின் மேம்பட்ட வடிவம் ஜெய்ஸ்வால் என அந்த பேட்டியில் அவர் 3 முறை கூறினார்)