விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரிங்கு சிங் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் அந்த சிக்சர் கிரிக்கெட்டில் உள்ள ஒரு மோசமான விதி காரணமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு நான்கு நாட்களில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது.

இதில் ஆஸ்திரேலியா வீரர் ஜாஸ் இங்கிலீஷ் சதம் அடித்தார். இதனை அடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் சூரியகுமார் யாதவ் 42 பந்துகளில் 80 ரன்களும், இசான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 194 ரன்களில் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
அப்போது கடைசி ஓவரின் ஆறு பந்துக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டது. இதில் முதல் பந்தில் ரிங்குசிங் பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்து ஒரு ரன் ஓட அடுத்த மூன்றாவது பதில் அக்சர் பட்டேல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனை அடுத்து நான்காவது பந்திலும் ஐந்தாவது பந்திலும் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனார்கள்.
இதனால் கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் என்ற நிலை இருந்தது.இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள், சிங்கிள் ஓடுவதை தடுக்க 30 மீட்டர் பில்டிங் வட்டத்திற்குள் வந்தார்கள். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் பளார் என சிக்சர் அடித்து ஆட்டத்தை இந்தியாவுக்கு சார்பாக முடித்து கொடுத்தார் ரிங்கு சிங். ஆனால் அந்த சிக்சர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு காரணம் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் அப்பாட் நோ பால் வீசி இருக்கிறார். இதனால் இந்திய அணிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் அது அந்த நோ பாலில் கிடைத்ததால் அத்துடன் போட்டி முடிந்து விட்டது. இதனால் அந்த சிக்ஸர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இது கிரிக்கெட்டில் உள்ள மோசமான விதியாகும்.
இதனால் அந்த சிக்சர் ரிங்கு சிங்கிற்கு கிடைக்கவில்லை. மேலும் கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கை வீரர் ரந்தீப், இதுபோல்தான் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் நோ பால் வீசினார். அப்போது ஷேவாக் சிக்சர் அடித்து சதம் அடித்து விட்டதாக நினைத்த நிலையில் அந்த சிக்ஸர் சேவாக்கு கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.