IND vs AUS: விராட் கோலி செய்தது மிகப் பெரிய தவறு.. நொந்து போன ஜெய்ஸ்வால்.. என்ன நடந்தது?
செயின்ட் லூசியா: 2021 டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் விராட் கோலி ஆனால் இந்த தொடரில் அவர் இரண்டாவது முறையாக டப்பட் ஆகியுள்ளார் இதன் மூலம் இளம்பிறர் யாசஸ் வி ஜெய்ஸ்வாலுக்கு அவர் மிகப்பெரிய அநீதியை செய்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொந்தளித்து வருகின்றனர்
இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி இதுவரை 6 போட்டிகளில் 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே அவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கு மேல் இருந்தது. தற்போது 6 போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 108 மட்டுமே.

டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆடிய கடைசி டி20 தொடரான ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் போது விராட் கோலி திடீரென டி20 அணியில் இடம் பெற்றார். அதற்கு முன் ஓராண்டாக அவர் டி20 அணியில் இருந்து விலகி இருந்தார். அந்த காலகட்டத்தில் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக அணியில் இடம் பெற்று இருந்தார்.
விராட் கோலி அனுபவ வீரர் என்பதால் அவரை உலகக்கோப்பை சேர்த்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் பிசிசிஐ அவரை அணியில் சேர்த்தது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா துவக்க வீரர்களாக களம் இறங்கியதால் மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் மாற்று வீராக மட்டுமே அணியில் இடம்பெற்று இருக்கிறார்.
ஜெய்ஸ்வாலின் இடத்தை விராட் கோலி எடுத்துக் கொண்ட நிலையில் அவர் ஓரளவு ரன் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், ரன்னும் எடுக்கவில்லை. அவரது ஸ்ட்ரைக் ரேட் மிக மோசமாக உள்ளது. 2024 ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி ரன் சேர்த்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் மோசமாக இருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு பதிலடி தரும் வகையில் ஐபிஎல் தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் அவர் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் பவுண்டரிகளை தன்னால் அனைத்து பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முடியும் என காட்டினார்.
ஆனால், அதே விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் தடுமாறி வருகிறார். இதைத்தான் விமர்சகர்கள் முன்பே குறிப்பிட்டிருந்தனர். வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள ஆடுகளங்கள் மந்தமாக இருக்கும், சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அங்கு விராட் கோலியால் எளிதாக ரன் சேர்க்க முடியாது எனக் கூறியிருந்தனர். அந்த கருத்துக்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு பிசிசிஐ விராட் கோலிக்கு வாய்ப்பு அளித்ததற்கு பலனாக அவர் தற்போது ஆறு போட்டிகளில் 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இனியாவது ஜெய்ஸ்வாலை அடுத்து வரும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் துவக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications