Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கு மாற்று வீரரை அறிவித்த BCCI! 26 வயதில் கிடைத்த வாய்ப்பு..பிளேயிங் லெவனில் வாய்ப்பு வருமா?

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலிருந்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாதியிலே விலகி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இதனால் இந்தியாவில் ஒரு வீரர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் அஸ்வின் பதில் ஏற்கனவே அணியில் மாற்று வீரர்களாக இருக்கும் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு தான் தனுஷ் கொட்டியான் வாய்ப்பு வழங்கி இருக்கிறார் என தெரிகிறது.

tanush kotian ravichandran ashwin ind vs aus ashwin retirement


எனினும் மூன்றாவதாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் வேண்டும் என்பதற்காக பிசிசிஐ தற்போது மும்பையைச் சேர்ந்த 26 வயது வீரரான தனுஷ் கோட்டியான் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதனை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தனுஷ் கோட்டியான் மெல்போர்னுக்கு புறப்பட்டு செல்கிறார். இதுவரை தனுஷ் கொட்டியான் 33 முதல் தர போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார்.

இதில் அவருடைய சராசரி வெறும் 25 என்ற அளவில் சிறப்பாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பேட்டிங்கில் 47 இன்னிங்ஸில் 1525 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 41 ஆகும். இதில் இரண்டு சதம், 13 அரை சதம் அடங்கும். அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக தனுஷ் கொட்டியான் களமிறங்கி ஒரு போட்டியில் 44 ரன்களும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார்.

கடந்த 2023-24 ரஞ்சித் தொடரில் பேட்டிங்கில் மொத்தமாக 52 ரன்களும்,பந்துவீச்சில் 29 விக்கெட்டு களையும் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். இதன் மூலம் 500 ரன்கள் மற்றும் 25 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையும் தனுஷ் கோட்டியான் பெற்றார்.

இதுபோன்று அண்மையில் நடைபெற்ற இராணி கோப்பையிலும் தனுஷ் கோட்டியான் முதல் இன்னிங்ஸ் 64 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்களும் எடுத்திருந்தார். இதனால், அக்சர் பட்டேல் தனிப்பட்ட காரணங்களால் இந்த தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. அஸ்வின் இடத்தில் தனுஷ் கோட்டியான், மனவ் சுதர் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தனுஷ் கோட்டியானுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Story first published: Monday, December 23, 2024, 21:34 [IST]
Other articles published on Dec 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+