Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியா பண்றது? கோலி கொடுத்த கேட்ச்.. பிடித்த ஆஸி. கேப்டன்.. அப்புறம் நடந்த அந்த ஷாக் சம்பவம்!

அடிலெய்டு : இந்திய அணி கேப்டன் விராட் கோலி விக்கெட்டை கிட்டத்தட்ட கைப்பற்றியும், கோட்டை விட்டது ஆஸ்திரேலிய அணி.

கோலி நிதான ஆட்டம் ஆடினாலும் அரைசதம் கடந்து ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்.

கோலி கொடுத்த விக்கெட்டை கைப்பற்றியும் ரிவ்யூ கேட்காமல் சொதப்பினார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். துவக்க வீரர் ப்ரித்வி ஷா இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆனார். மயங்க் அகர்வால் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

அதன் பின் புஜாரா, கோலி இணைந்து நிதான ஆட்டம் ஆடி வந்தனர். இருவரின் நிதான ஆட்டத்தால் ரன் ரேட் ஓவருக்கு 2 ரன்களுக்கும் கீழே இருந்தது. அப்போது விக்கெட் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தவித்து வந்தனர்.

கோலி தந்த கேட்ச்

கோலி தந்த கேட்ச்

அப்போது 35வது ஓவரின் முதல் பந்தில் நாதன் லியான் பந்துவீச்சில் கோலி லெக் திசையில் சென்ற பந்தை அடிக்க முயன்று தவறவிட்டார். பந்தை ஆஸ்திரேலிய அணி கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம்ப் பெயின் கேட்ச் பிடித்தார்.

ரீப்ளே

ரீப்ளே

அவர் அவுட் கேட்டார். எனினும், அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார். பின்னர் ரீப்ளேவில் பந்து விராட் கோலியின் கிளவுஸில் மிக மெல்லிய அளவில் படுவது தெரிந்தது. ஆனாலும், டிம் பெயின் அம்பயர் மறுத்ததை ஏற்றுக் கொண்டு விட்டார்.

கோட்டை விட்ட டிம் பெயின்

கோட்டை விட்ட டிம் பெயின்

டிஆர்எஸ்-இல் 15 வினாடிகள் நேரம் இருந்த நிலையில் அதில் 2 வினாடிகள் இருக்கும் வரை ரிவ்யூ கேட்பது பற்றி விவாதம் செய்த அவர் ரிவ்யூ கேட்க வேண்டாம் என முடிவு எடுத்தார். கையில் மூன்று ரிவ்யூ இருந்தும் அவர் விராட் கோலி விக்கெட்டை கோட்டை விட்டார்.

அரைசதம்

அரைசதம்

விராட் கோலி நிதான ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். 123 பந்துகளில் கோலி அரைசதம் கடந்தார். இந்தியா தொடர்ந்து ஓவருக்கு 2 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் குவித்தாலும், விக்கெட்களை விரைவாக இழக்காமல் பாதுகாத்து ஆடியது.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

71 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது ரன் ரேட் 2.21 மட்டுமே. விராட் கோலி 66, அஜின்க்யா ரஹானே 21 ரன்கள் குவித்து ஆடி வந்தனர்.

Story first published: Thursday, December 17, 2020, 17:27 [IST]
Other articles published on Dec 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+