
புஜாரா கேட்ச்
சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த போது புஜாரா கேட்ச் கொடுத்ததாக ஆஸ்திரேலியா எண்ணியது. விக்கெட் கீப்பரும், ஆஸ்திரேலிய அணி கேப்டனுமான டிம் பெயின் அவுட் கேட்டார். அம்பயர் மறுக்கவே ரிவ்யூ கேட்கப்பட்டது.

கோபம்
மூன்றாவது அம்பயர் பந்து பேட்டில் பட்டதை உறுதி செய்யப்படாததால் கள அம்பயரின் முடிவுக்கே விட்டுவிட்டார். ஏற்கனவே, கள அம்பயர் அவுட் இல்லை என தீர்ப்பளித்ததால் புஜாரா தொடர்ந்து பேட்டிங் செய்தார். இந்த முடிவை கண்டு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கோபம் அடைந்தார்.

அம்பயருடன் மோதல்
கள அம்பயர் வில்சனிடம் அவர் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். பந்து பேட்டில் பட்டதாக அவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அம்பயர் இந்த முடிவை மூன்றாவது அம்பயர் தான் எடுத்தார். என்னிடம் பேச வேண்டாம் என காட்டமாக கூறினார்.

தண்டனை
இந்த சம்பவத்தை அடுத்து அம்பயரின் முடிவை எதிர்த்து பேசியதற்காக டிம் பெயின் மீது விதிப்படி நடவடிக்கை எடுத்தது. அவருக்கு 15 சதவீதம் சம்பளத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











