14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது தனி கவனம்.. வீடியோ காலில் வந்து நியாபகப்படுத்திய RR பயிற்சியாளர்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்திருக்க கூடியவர் 14 வயதுடைய வைபச் சூர்யவன்சி. ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் சதம் அடித்தது மட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற மண்களில் டெஸ்ட் போட்டிகளிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
இந்திய அணியில் விரைவிலே அவருக்கு இடம் தர வேண்டும் என்று பல ரசிகர்களும் கோரிக்கை விடும் அளவுக்கு வைபவ் சூரியவன்ஷியின் பேட்டிங் இருக்கிறது. 14 வயதான சூரியவன்சி தடம் மாறாமல் கிரிக்கெட்டிலே கவனம் செலுத்த ராகுல் டிராவிட் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் முக்கிய காரணமாக இருக்கின்றனர்.

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரான விக்ரம் ராத்தோர் வைபவ் சூரியவன்ஷி மீது கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இந்திய அண்டர் 19 அணியில் இடம் பெற்றுள்ள வைபவ் சூர்யவன்ஷி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
செவ்வாய்க்கிழமை இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக வைபவ் சூரியவன்சி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியாளரான விக்ரம் ராத்தோர், அவருக்கு வீடியோ கால் செய்திருக்கிறார். அப்போது வைபவ் சூரியவன்ஷி, சிறுவன் என்பதால் உடல் தகுதியை அவர் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும், கண்டதை எல்லாம் சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் வீடியோ காலில் கூறினார்.
அதற்கு நான் சரியாக பின் தொடர்கிறேன் கோட்ச். என் உடல் தகுதியை பாதுகாக்கிறேன் என்று அவர் கூறினார். அதற்கு உடனே ரத்தோர், நீ இந்தியா வந்து நான் உன்னை பார்த்தால் மட்டுமே நீ சொல்வது உண்மையா என்று தெரியும் என்று கூறினார். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே வருகிறேன் என்று பதில் அளித்தார்.ஆஸ்திரேலியா அண்டர் 19 எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வைபவ் சூரியவம்சம் 78 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்து 86 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார்.


Click it and Unblock the Notifications