Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி அவ்ளோதான் முடிஞ்சுச்சு.. தமிழக வீரருக்கு கல்தா.. விரைவில் பிசிசிஐ முடிவு.. அதிர வைக்கும் தகவல்

மும்பை : 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அந்த வாய்ப்பை இழக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும், அத்துடன் அவர் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

அது பாற்றி இப்போது தான் பிசிசிஐக்கு தெரிய வந்துள்ளது. இதை அடுத்து அவரை பிசிசிஐ அணியில் இருந்து நீக்கவே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தி

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று இருந்தார். கடந்த சீசனில் காயம் காரணமாக ஒரு போட்டியில் மட்டுமே ஆடிய அவர் இந்த சீசனில் கொல்கத்தா அணியில் 13 போட்டிகளில் வாய்ப்பு பெற்றார்.

அசத்தல் செயல்பாடு

அசத்தல் செயல்பாடு

13 போட்டிகளில் அவர் 17 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அதில் ஒரு போட்டியில் 20 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டி இருந்தார். அது மட்டுமின்றி கட்டுக்கோப்பாக பந்து வீசினார். இதை அடுத்து அவர் கவனம் பெற்றார்.

அணியில் வாய்ப்பு

அணியில் வாய்ப்பு

மிஸ்டரி ஸ்பின் பந்துவீச்சின் காரணமாக அவரை இந்திய டி20 அணியில் சேர்த்தது தேர்வுக் குழு. ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயரும் இடம் பெற்றது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. வெறும் ஐபிஎல் செயல்பாடுகளின் அடிப்படையில் அவர் இந்திய அணியில் இடம் பெற்றார்.

காயம்

காயம்

இந்த நிலையில் அவருக்கு ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டது. அது குறித்த தகவல் தாமதமாகவே தெரிய வந்தது. சில தகவல்களின் படி இந்திய அணித் தேர்வுக்கு முன்பே அவருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது, அதனுடன் அவர் போட்டிகளில் பங்கேற்றார் என கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை அவசியம்

அறுவை சிகிச்சை அவசியம்

அவருக்கு வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த அறுவை சிகிச்சை ஐபிஎல் தொடருக்கு முன்பே செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அவர் அதனுடன் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்.

பந்தை எறிய முடியாது

பந்தை எறிய முடியாது

மேலும், அவரால் தற்போது உள்ள சூழ்நிலையில், பந்தை எறிய முடியாது . அதனால் அவர் இந்திய அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலிய டி20 தொடரில் பங்கேற்பது கடினம் தான். இது பற்றி பிசிசிஐ விரைவில் முடிவு செய்ய உள்ளது.

நீக்கம்?

நீக்கம்?

அவர் காயம் பெரிது என்பதால் அவர் ஆஸ்திரேலியா செல்லவே மாட்டார். பிசிசிஐ அவரை அணியில் இருந்து நீக்கி விடும் என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமான விஷயம். எனினும், அப்படி கிடைத்த வாய்ப்பை காயத்தால் இழக்க உள்ளார் வருண்.

Story first published: Monday, November 9, 2020, 15:13 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+