Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி அப்படி செய்தால் எரிச்சலாகும்.. அவருக்கு இது கடைசி டெஸ்ட் தொடரா? சோகமான பேட் கம்மின்ஸ்!

சிட்னி: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி களத்தில் செய்யும் செயல்கள் எரிச்சலடைய வைத்தாலும், அவர் சினிமாவை போன்ற சூழலை உருவாக்குவதில் வல்லவர் என்று ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். அவருக்கு இது கடைசி டெஸ்ட் தொடராக அமைந்ததில் சோகம் இருந்தாலும், விராட் கோலியுடன் விளையாடியது மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 9 இன்னிங்ஸில் விளையாடி 190 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அந்த 9 இன்னிங்ஸில் 8 முறை ஆட்டமிழந்த விராட் கோலி, அனைத்து இன்னிங்ஸிலும் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளுக்கு விக்கெட்டை பறிகொடுத்து சென்றார்.

ind vs aus virat kohli pat cummins vs

விராட் கோலி 36 வயதை எட்டவுள்ள நிலையில், ஆஸ்திரேலியா மண்ணில் இதுவே அவரின் கடைசி டெஸ்ட் தொடராக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், விராட் கோலிக்கு எதிராக ஆடுவது எப்போதும் மிகச்சிறந்த போட்டியாக இருக்கும். அவர் ரன்களை சேர்ப்பதை விடவும், சினிமாவை போன்ற ஒரு சூழலை களத்தில் நிகழ்த்துவார்.

அது சில நேரங்களில் பார்க்க அற்புதமாக இருக்கும். அதுவே எதிரணியாக இருக்கும் போது எரிச்சலடைய செய்யும். ஆனால் அப்படியான சூழலை விராட் கோலி எப்போதும் திட்டமிட்டே நிகழ்த்தி இருக்கிறார். கடந்த தசாப்தத்தில் விராட் கோலி மிகச்சிறந்த வீரராக வலம் வந்திருக்கிறார். அவரின் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றால், வெற்றிக்காக நீண்ட போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழல் வரும்.

அவருக்கு இது கடைசி தொடராக இருந்தால், நிச்சயம் சோகம் தான் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பும்ரா குறித்து பேசுகையில், ஒவ்வொரு முறை பவுலிங் செய்யும் போதும் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துகிறார். முக்கியமான விக்கெட்டை பெற்றுள்ளார். அதனால் இந்த இன்னிங்ஸில் பும்ரா களமிறங்காதது எங்களுக்கு சாதகமாக அமைந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதேபோல் ரோஹித் சர்மா இந்த போட்டியில் ஆடாததும் ஆச்சரியமாக இருந்தது. எப்படி அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தாரோ, அதேபோல் இதுவும் ஆச்சரியம் தான். ஆனால் அது எங்களுக்கு எந்த தாக்கத்தையும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கம்மின்ஸ் நீண்ட காலமாக காத்திருந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலமாக டி20 உலகக்கோப்பையை வீரராக வென்றிருக்கிறார். அதேபோல் உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் வென்று அசத்தியுள்ளார். இதனால் ரிக்கி பாண்டிங்கிற்கு பின் இத்தனை கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியா கேப்டனாக பேட் கம்மின்ஸ் உயர்ந்துள்ளார்.

Story first published: Sunday, January 5, 2025, 16:46 [IST]
Other articles published on Jan 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+