Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்த்தையால் அதை சொல்ல முடியாது.. எல்லாமே போச்சு.. தோல்விக்கு காரணம்.. புலம்பித் தள்ளிய கோலி!

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

போட்டியிலும் மிக எளிதாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலியிடம் கேட்கப்பட்ட போது அவர் புலம்பித் தள்ளினார்.

இரண்டு நாளில் கஷ்டப்பட்டு நல்ல நிலையை அடைந்தோம். ஆனால், அது எல்லாமே ஒரு மணி நேரத்தில் போய்விட்டது என்றார்.

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 244 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா ஸ்கோர்

ஆஸ்திரேலியா ஸ்கோர்

அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தன் இரண்டாவது இன்னிங்க்ஸில் 9 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து இருந்தது.

40 நிமிடங்களில்..

40 நிமிடங்களில்..

இந்திய அணி 62 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. ஆனால், மூன்றாம் நாள் காலையில் சுமார் 40 நிமிடங்களில் இந்திய அணி 31 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. 36 ரன்களுக்கு இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா வெற்றி

அடுத்து 90 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பின் பேசிய கேப்டன் விராட் கோலி, ஒரு மணி நேரத்தில் எல்லாமே போய்விட்டது என புலம்பினார்.

மொத்தமாக சரிந்து விட்டோம்

மொத்தமாக சரிந்து விட்டோம்

"இது வார்த்தைகளில் சொல்ல கடினமானது. நாங்கள் ஆட வந்த போது 60 ரன்கள் முன்னிலையில் இருந்தோம். அதன் பின் மொத்தமாக சரிந்து விட்டோம். இரண்டு நாட்கள் நல்ல கிரிக்கெட் ஆடினோம். அதன் பின் அதை ஒரே நாளில் இழந்து விட்டோம். இது மிகவும் வலிக்கிறது" என்றார் கோலி.

மாறிய மனநிலை

மாறிய மனநிலை

"இன்று பேட்டிங்கில் சரியான நோக்கம் இல்லை. இது குறித்து தான் நாங்கள் சிந்தித்து கற்றுக் கொள்ள வேண்டும். பந்துவீச்சாளர்கள் முதல் இன்னிங்க்ஸ் போலவே பந்து வீசினார்கள். ஆனால், எங்கள் மனநிலை ரன் குவிக்க வேண்டும் என்பதாக இருந்தது." என தோல்விக்கு காரணம் கூறினார் கோலி.

மோசமான சாதனை

மோசமான சாதனை

இந்திய அணி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது மிக மோசமான சாதனை ஆகும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவே இந்தியாவின் குறைந்த டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஸ்கோர் ஆகும்.

Story first published: Saturday, December 19, 2020, 17:37 [IST]
Other articles published on Dec 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+