Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோகம்.. 27 இன்னிங்ஸில் 26 முறை ஒரே கதைதான்.. ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தில் அவுட்டான விராட் கோலி!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 86 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில், மீண்டும் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்திற்கு விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் கடைசியாக ஆடிய 27 இன்னிங்ஸில் விராட் கோலி 26 முறை கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களை விளாசினார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ரோஹித் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ind vs aus virat kohli vs

தொடர்ந்து வந்த கேஎல் ராகுல் தேநீர் இடைவேளைக்கு முன் 24 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து கடைசி செஷனில் விளையாட ஜெய்ஸ்வால் - விராட் கோலி இணை களம் புகுந்தது. ஒருபக்கம் ஜெய்ஸ்வால் தனது பாணியில் விரைவாக ரன்களை குவிக்க, இன்னொரு பக்கம் விராட் கோலி கவனமாக விளையாடினார். கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோரின் பந்துகளில் சில பவுண்டரிகளையும் விளாசினார்.

இவர்களின் பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணியின் ஸ்கோரும் விரைவாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடக்க, மறுபக்கம் விராட் கோலி அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளை தொடவே இல்லை. இதனால் விராட் கோலி இம்முறை ஒரு முடிவுடன் களமிறங்கியதாக ரசிகர்கள் பேசத் தொடங்கினர்.

இவர்களின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்த போது, திடீரென ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாக, ஆஸ்திரேலியா அணி பவுலர்கள் உற்சாகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து போலண்ட் வீசிய அடுத்த ஓவரிலேயே விராட் கோலி 86 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மீண்டும் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்திற்கே விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஜெய்ஸ்வாலின் ரன் அவுட் விராட் கோலியின் கவனத்தை சிதைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி ஆடிய 27 இன்னிங்ஸில் ஒரேயொரு முறை மட்டுமே ரன் அவுட்டாகி இருக்கிறார். மற்ற 26 இன்னிங்ஸிலும் கேட்ச் கொடுத்து மட்டுமே விராட் கோலி ஆட்டமிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

Story first published: Friday, December 27, 2024, 12:40 [IST]
Other articles published on Dec 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+