
என்ன செய்தார்கள்?
டிசம்பர் மாத துவக்கத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா "பேபி ஸ்டோர்" ஒன்றிற்கு சென்றதை தற்போது தூசி தட்டி எடுத்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் பெரிதாக்கி வருகின்றன. அப்போது அவர்கள் ஊழியர் ஒருவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

முகக் கவசம்
அது விதிமீறல் என கூறப்படுகிறது. கேப்டன் விராட் கோலியே விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் பேசி வருகின்றன. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா முகக் கவசம் அணியாததையும் அவர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

பாதிப்பு இல்லை
மறுபுறம், ரோஹித் சர்மா உள்ளிட்ட ஐந்து வீரர்கள் விதிமீறலில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த ஐந்து வீரர்கள் உட்பட அனைத்து இந்திய வீரர்களும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டனர். அதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

முடிவுக்கு வரும்
எனவே, இந்த பிரச்சனையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு இத்துடன் முடிவுக்கு கொண்டு வரும் என நம்பப்படுகிறது. இதற்கு மேலும் இதை பெரிதாக மாற்றினால் இந்திய வீரர்கள் போட்டியில் ஆட மறுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications