Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னிடம் sandpaper இல்லை! பாக்கெட்டை பாருங்க! ஆஸி. ரசிகர்களை வச்சு செய்த கோலி.. என்ன நடந்தது?

சிட்னி: பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக வெல்ல முடியாமல் தவித்து வந்தது. அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு கடந்த இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றியது.

இதனால் எப்படியாவது இம்முறை பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்ல வேண்டும் என கடுமையாக போராடி வருகிறது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி இருக்கிறது.

ind vs aus virat kohli ball tampering

இந்த நிலையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 181 ரன்களில் சுருட்டி நான்கு ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டை இந்தியா அபாரமாக வீழ்த்தினர். அப்போது இந்திய அணி பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

பும்ரா தனது ஷூவில் இருந்து எதையோ எடுப்பதாகவும், இதனால் பந்து சேதம் அடைந்து இந்திய அணி விக்கெட்டை எடுப்பதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டது. இதனால் இன்று சிட்னி மைதானத்தில் வந்திருந்த ஆஸ்திரேலிய ரசிகர்களும், இந்தியா பந்தை சேதப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டை வைத்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக பேட்டிங் செய்து வந்தது 6.2 ஓவர்கள் எல்லாம் 50 ரன்களை எடுத்த நிலையில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனால் ஆஸ்திரேலியா 58 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

அப்போது மீண்டும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய அணி பந்தை சேதப்படுத்தி விட்டதாக குரல் எழுப்பினர். இதனை கவனித்த விராட் கோலி தன்னுடைய பேண்ட் பாக்கெட்டை திறந்து ரசிகர்களிடம் காண்பித்தார். மேலும் தன்னுடைய பேண்டையும் லேசாக விராட் கோலி கழற்றி காண்பித்தார். மேலும் தன்னிடம் sand பேப்பர் இல்லை என கூறினார்.

மேலும், நாங்கள் உங்களைப் போல் பந்தை சேதப்படுத்த மாட்டோம் என்றும் சைகையில் ரசிகர்களுக்கு விராட் கோலி செய்து காண்பித்தார்.

இதனை பார்த்த ரிஷப் பன்ட் சிரித்தார். ஆஸ்திரேலிய ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் இந்திய வீரர்கள் மீது குற்றச்சாட்டு வைத்த நிலையில் அதற்கு விராட் கோலி களத்திலே தக்க பதிலடி கொடுத்திருக்கும் சம்பவம் இந்திய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Story first published: Sunday, January 5, 2025, 7:34 [IST]
Other articles published on Jan 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+